பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV தமிழ்க்கல்லூரியின் வெள்ளிவிழா நினைவாக 1978-ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டருளினார். இப்பதிப்பு வந்தபிறகுதான் இத்தகைய அருமையானதோர் தமிழிலக்கண நூல் உள்ள தென்பதை இன்றைய தமிழாய்வாளர் பெயரளவிலேனும் அறிய வாய்ப்பேற்பட்டது. இப்பதிப்பு வரலாறு அவர்களுக்கு இந்நூலாசிரியரின் பெயரரின் மூத்த மைந்தராகிய சுவடிக் கலைஞர் புலவர் தி.மு. சங்கரலிங்கம் அவர்கள் 1982-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்மாண்புமிகு துணைவேந்தர் ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார். அதனுள் இதுவரை வெளியாகாமலிருக்கும் ஏழா மிலக்கணத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டு அப்பணியில் என்னை ஈடுபடுத்தலாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். க்கடிதத்தினைக் கண்ட முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர். வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் என்பால் கையெழுத்துப்படியாக உள்ள அறுவகையிலக்கணம். எழா மிலக்கணம் ஆகிய இரண்டையும் கவனமாகப் பரிசீலித்தார். அறுவகை இலக்கணத்திற்கும் இல்லாமலிருப்பதால் ஏழா மிலக்கணத்திற்குமுன் இதனைக் குறிப்புரையோடு பதிப்பிக்க விரும்பினார். நான் இந்நூல்களோடு முன்பே பழக்கப்பட்டவன் என்பதாலும் மடாலயத்தில் மாணவர்களுக்கு இவற்றைப்பாடங் கூறியவன் என்பதாலும் இவ்வுரைப் பதிப்புப் பணியை என்பால் ஒப்படைத்தார். மேலும் நூலாசிரியராகிய சுவாமிகளின் கைப்பட எழுதப் பெற்ற ஓலைச்சுவடியைத்தான் மூலப்படியாகக் கொள்ளவேண்டுமென்றும் மற்ற பதிப்புகளையோ அல்லது என் கையெழுத்துப்படியையோ சார்ந்திருக்கலாகாது எனவும் ஆணையிட்டார். அவ்வாணையின் வண்ணம் திருவாமாத்தூர்க் கௌமார மடாலயத்திலிருந்து அறுவகையிலக்கணம், ஏழா மிலக்கணம் ஆகிய இருசுவடிகளும் 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னால் பெற்று வரப்பெற்றன.