பக்கம்:அலிபாபா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
விருந்து, நடனம், மரணம்!


அலிபாபாவுக்கு மனத்தில் நிம்மதியில்லை. திருடர் தலைவனும், இரண்டு திருடர்களும் உயிரோடு இருந்தால், தனக்கு எப்பொழுது, என்ன நேருமோ என்று அவன் அஞ்சினான். கூடியவரை அவன் ஒதுக்கமாகவே வாழ்ந்து வந்தான். தன்னிடம் உள்ள செல்வத்தைப்பற்றியோ, தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றியோ, வெளியே எவரும் தெரிந்து கொள்ளும்படி அவன் எதையும் செய்யவில்லை.

இனி, திருடர் தலைவனைப்பற்றிக் கவனிப்போம். அவன் அலிபாபாவின் வீட்டிலிருந்து தப்பி ஓடியதும், நேரே வனத்திற்குச் சென்றான். அவனுடைய உள்ளம் உடைந்து போயிருந்தது. கூடச்சென்றிருந்த நண்பர்கள் அனைவரும் மாண்டு ஒழிந்து போய்விட்டனர். குகையிலிருந்து செல்வங்களை அள்ளிக்கொண்டு சென்றவன் மேலும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறான். அவன் எத்தனை தடவைகள் வேண்டுமாயினும் குகையிலிருந்து பொக்கிஷங்களை அள்ளிக் கொண்டு செல்லமுடியும். ஏனெனில், அவனுக்கு குகைக்குள் நுழைவதற்கு வேண்டிய மந்திரச் சொற்கள் தெரிந்திருக்கின்றன. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/59&oldid=512505" இலிருந்து மீள்விக்கப்பட்டது