பக்கம்:அலைகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கெற்றிக் கண் இ 115

“ தாயே தேஹி-’’ உள்ளிருந்து மெட்டிச் சப்தம் அணுகியது. அவனது முகத்தில் முறுவல் அரும்பியது. தன் அற்புதமான அழகின்

முள்ளை, தன் குரலினிமையால் மறைத்தான்.

வந்தாள். வந்து வாசலில் நின்றவள்தான். அவனுடய கண்கள், மெதுவாய் உயர்ந்து, அவளைக் காலினின்று தலை வரைக்கும் கணித்து, சட்டென அவளுடைய கண்களைச் சந் தித்து, கனிந்த விஷத்தைக் கக்கின. காமனைப் பழித்த அம் மாபெரும் அழகிலும் அதிக வேதனையுமுண்டோ? அவ ளுடைய மானமும் உள்ளமும் கழன்று. அவனது ஒட்டில் விழுந்தன. புன்னகை புரிந்தவண்ணம், கபாலி, மறு வாசலை நோக்கி நடந்தான்.

அன்று அவன் வாங்கிய பிச்சையே வினோதம். வளை யும் பவித்ரமும், செவியினின்றி கழலும் குழையும், கண்டத்தி னின்று சரிந்த சரமும் பிரம்ம கபாலத்தில் குவிந்தன. வீட் டுக்கு வீடு அந்தப் பிரம்மசாரி இழைத்த அலங்கோலத்துக்கு, அளவு இல்லை:

கண்டதும் கல்லாய்ச் சமைந்தவர் எத்தனைபேர்! அவன் கையைப் பிடித்திழுப்பவர் எத்தனைபேர்; அவனைப் பங்கிட ஒருத்தரோடொருவர் பூனைபோல் பிறாண்டிச் சண்டையிடு பவர் எத்தனையோ? அவசரமாய் வற்கலமும் புடவையும் இடையினின்று நெகிழ, மெய்ம்மறந்து மயங்கி நிற்பவ்ர் எத் தனை பேர்? அந்தக் காட்சி அவனுக்குத் தான் அற்புதம். சகல ஆசாரங்களுக்கும் உறைவிடமாயிருந்த அவ்வாசிரமம், சடுதி நேரத்தில் ஆபாசம் நிறைந்த அனங்கனின் போர்க்கள மாயிற்று.

இன்னும் ஒரு வீடுதான். அத்துடன் அவனது வெற்றி யும் முழுமை பெற்றுவிடும்.

“ ‘பிச்சை...! அது என்ன பிச்சைக் குரலாகவாயிருக் கிறது? மெட்டி குலுங்க, ஒட்டமற்று, நிதானமான நடை யோசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/117&oldid=666836" இருந்து மீள்விக்கப்பட்டது