பக்கம்:அலைகள்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ. 235

மின்னல்கள் கிளை பிரிந்து விளையாடுகின்றன. கால்கள் கிடுகிடுத்தன. தூணில் சாய்ந்தேன். அவளை அடையாளம் கண்டு கொள்கையில் கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டைவரை இன்ப பயங்கரம் ஊடுருவுகின்றது.

காத்திருந்து, ஒய்விருந்து, மறுபடியும் விளையாட்டில் இறங்கி விட்டாளா? வெள்ளிக்கிழமையின் கண்மலர், கவசம், ஆபரண அலங்கரண பூஷிதையாய் கர்ப்ப க்ருஹத்தி விருந்து வெளிப்பட்டு விட்டாளா?

உக்ரமுகி.

என்ன அத்திம்பேரே, பேந்தப்பேந்த முழிக்கிறேள்? என்னைத் தெரியல்லியா? என் காதிலே டாலர் தேடறேளா? எப்பவுமே டாலர் போட்டுக்கற வயசிலேயே உட்காந்திண் டிருக்க முடியுமா? அக்கா கலியாணத்தின் போது என்னைப் பார்த்தது தானே! அப்புறம் நீங்கள் தான் மச்சினி செத் தாளா இருக்காளா என்றுகூட இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. என் கலியாணத்துக்கூட உங்களால் வர முடியவில்லை. உங்களுக்கு உங்கள் வேலை அவ்வளவு மும் முரம், முக்கியம் இல்லையா? ஹல்ம் ஹஅம் இருக்கட்டும் சொல்றேன்.”

உபசரிப்பில் கூடத்துக்கும் சமையலறைக்குமாய் அலை கிறாள். ஏதோ வாய் ஓயாமல், மூச்சு விடாமல் பேசிக் கொண்டே:

“நீங்கள் என்னை மறந்துட்டாலும் நான் உங்களை இன்னும் அடையாளம் வெச்சிண்டிருக்கேன் பார்த்தேளா! இதே வந்துட்டேன் அடுப்புலே காப்பி சுட்டுண்டிருக்கு. தோசைக்குக் கல்லைப் போட்டிருக்கேன். அவாள் எல்லாம் இன்னிக்குத் தெப்பல் பன்னெண்டு சுத்தும் பார்த்துட்டுதான் வருவா. தோசை ரெண்டு சூடா சாப்பிடுங்கோளேன். லேட்டா சாப்பிட்டுண்டாப் போறது. அவர்சுட நேத்து வரைக்கும் இங்கே தான் இருந்தார். இன்று காலையில்தான் ஊருக்குப் போனார். நீங்கள் வரப்போறேள்னு ஒரு வf

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/237&oldid=667047" இருந்து மீள்விக்கப்பட்டது