பக்கம்:அலைகள்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ 263

‘ஜகதா நீ காப்பி எல்லாம் குடிச் சாச்சு. ராத்துக்கம் கெட்ட கோபம், ரயில் பிரயாண அசதி எல்லாம் இப்போ தணிஞ்சிருக்கும். நீ செளக்கியமா? உன் குழந்தைகள் செளக் கியமான்னு நான் கேட்க வேண்டியதில்லை, இனிமேல் என் செளக்கியத்தை நான் பாத்துக்கணும். இருந்தாலும் அது களும் செளக்கியமா? உன் ஆம்படையான் பாவம், அவர் செளக்கியமா? இதெல்லாம் பத்ததிக் கேள்விகள் இருக்கே, கேட்டாகணுமே!’’

“கேளுங்கோ கேளுங்கோ. நன்னாக் கேட்டாகணும். எப்போத்தான் நீங்க தெரிஞ்சுக்கறது? உங்களுக்குக் பொண் ணானாலும் உலக அனுபவத்தில் உங்களைவிட நான் மூத்தவள் என்கிறதை நீங்கள் ஒப்புக்கொள்ளணும். நான் ஆறு குழந்தைகளுக்குத் தாயார்’

அவள் அப்பா அனுமார் மாதிரி கைகட்டி வாய் புதைச் சுண்டார் .

“இதென்ன நீ சொல்வித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன? இருந்தாலும் இப்போ வந்த விஷயம் என்னன்னு நான் கேக்கலாமோ?”

அதுக்குள்ளே நான் இடைமறிச்சேன். ‘இதென்ன தத்துப் பித்துன்னு கேட்டுண்டு?-’’

  • அதுக்கில்லே அகிலா, இப்போத்தானே ஆறு மாஸ்த் துக்கு முன்னாலே இவளை இங்கே பார்த்தாப்போலே இருக்கு. அதுக்குள்ளேயும்? என் பெண் தான் வந்திருக்காள் இல்லேன்னு சொல்லல்லே. ஒருவேளை மாப்பிள்ளையைத் தனியாச் சமைக்கவிட்டு அவரை சமையல்லே “எக்ஸ் பெர்ட் டா ஆக்கறதா உத்தேசமா? இல்லாட்டா அவன் சமையல் இவள் நாக்குக்கு ஒத்துக்கல்லையா?”

அவர் இப்படிப் பேசறப்போல்லாம் எனக்கு அடி வயத்தை பகீர் பகீர்ங்கறது. இந்த மனுஷனுக்கு இதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/265&oldid=667100" இருந்து மீள்விக்கப்பட்டது