பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 79


தன் அறைக்குள் ஒடிப்போய் கதவைத் தாளிட்டுக்
கொண்டு விட்டார்.

அவரை அவள் கடைசியாகப் பார்த்தது அத்தோடு
சரி.

‘இல்லை மாமா. ஒண்ணும் மோசமில்லை’ என்று
ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ? தோன்றவில்லை,
வாஸ்தவம். ஆனால் அப்படிச் சொல்லலாமோ? அவ
ளுடைய மானம் என்னவாச்சு? எல்லாரையும் போல்தான்
இவளும் என்று விகல்பமான எண்ணத்துக்கு இடம்
கொடுத்துவிட்டேனானால்? ஒருவேளை அவர்மேல் இருந்த
இரக்கத்தில் இணங்கியிருப்பேனோ? பிறகு என் கதி
யென்ன? சே! அவருக்கு எந்தக் கெட்ட எண்ணமுமில்லை,
எனக்குமில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் என்னத்தை
நிரூபிப்பது? நிரூபிப்பதன் அவசியமே குற்ற உணர்வில்
தானே!

தலை சுற்றிற்று. அவர் சாதம் அடுப்பில் தயாரா
யிருந்தது. போட்டுக் கொண்டு சாப்பிடட்டும்.

அங்குவிட்டு அகன்றாள்.

நடந்தது இதுதான்.

மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள்.

“அப்பா நான் தோத்துப் போனேன். உங்களை
மன்னிப்புக் கேக்கணுமா? என் தோல்வியை ஒப்புக்கொள்
றேனே, அதுவே மன்னிப்புக் கேக்கற மாதிரிதானே! இனி
இப்படி நேராது-இனிமேல் நேருவதற்கே என்ன இருக்கு?
என் பையனை உருப்படுத்தணும். அதுதான் இனி என் முழு
நோக்கமே”