உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபோற்காதம். சிறப்புற்ற புலவர்கண்முன் பேசுமாற்ற லிழந்தார் சிலர், நல்லூழ்வந்து கைகூடப் பெறாமையாற் பொறா மையாற் "குற்றமே தெரிவார் குறுமாமுனி, சொற்றபாவினு மோர்குறை சொல்வரால்" என்றதற்கேற்பப் பலவாறாகப் பேசி யவலமுறுவதோடு, செய்ந்நன்றி கோறலா முய்தியில் குற்றமுமியற்றிப் பாவத்திற் கிலக்காவர். இவருரை நல்லறி மாக்க ளல்லரா மாக்கள் அவைக்களம் படுவதூஉம் நல்லறி மாக்கள் செவிக்களம் படுவதல்லதூஉமாம் புரையுரையாம் வெற்றுரையென ஒருபுறமொதுக்குவதே கடனென்பது. தருக்க சங்கிரகத்தின் மேற்சூத்திரமும் தருக்கசங்கிரக தீபிகையின்கீழ் விளக்கமு மியற்றப்பெற்று 'அளவியல் என் னுந் தருக்கவிளக்கம்' எனப் பெயருறீஇ நிலவுவது இந்நூல். இந்நூலினை யியற்றிய நல்லாசிரியர் வைதிகச் சைவராம் சோமசுந்தரப் பிள்ளை யென்பார். இந்நூலினுட்சிலவிடங் களில் நம் யோகீந்திரர் சங்கிரகத்தின்மேற் பிள்ளையவர்கள் சூத்திரமியற்றியது ஒழுங்குபற்றியும் ஒற்றுமைபற்றியுமாக லின் நிறையறிமாந்தர் வெறுப்புறாரென்க. இன்னுந் தருக் கப்பகுதியில் விளக்கஞ்செய்து போதருவன பலப்பல விருப் பினும் அவற்றையெல்லா மிந்நூலாரொரீஇச் சேறலென்னோ வெனின் கூறுதும். முன்னூலொடொப்ப வாயுங்கான் மற் றொன்று விரித்தலென்னும் வழூஉவரனோக்கி மாதவப்பெருந் தகை யோகிக ளுரைத்தவற்றிற்கே விளக்கங்கண்டாரென் பது.