உசு தருக்கவிளக்கம்.
- ஈண்டுக் கூறாதொழிந்த இலக்கணம் மேற்சூத்திரத்தினின்றுங்
கொணர்ந்து ஒட்டிக்கொண்டுணர்க. முன்னர் வருவனவற்றிற்கும் இஃதுஒக்கும். - (இ ள்.) அப்புவாவது குளிர்ந்த பரிசமுடையது. அதுநித்தம், அநித்தம் என இருவகைத்து. நித்தம் பரமாணுரூபம் அநித்தம் காரி யரூபம்.மறித்தும், சரீர இந்திரிய விடயவேறுபாட்டால் மூவகைப் படும். சரீரம் வருணலோகத்தினுள்ளது. இந்திரியம் சிங்கவை, சுவையைக் கவர்வது. அது நாவினுனியிலிருப்பது, விடயம் ஆறு, கடல் முதலியனவாம். (எ - று.) அப்புவாவது. எ-து. அப்பிலக்கணங்கூறுகின்றது. தோன்றிய பொழுதே அழிவுபடும் நீரின்கண் அவ்வியாத்தி நீக்குதற்குக் குளிர் ந்த பரிசத்தோடு ஒருங்கிருக்கும் பொருண்மைக்கு அபரமான சாதி யுடைமையென்பது கருத்தாகக் கொள்க. 'தண்ணென்றது சிலா தலம்', என்புழித் தட்பந்தோன்றுதல் நீரின் சம்பந்தத்தாலாகலின், ஆண்டு அதிவியாத்தியின்மையு முணர்க. ஏனையனைத்தும் முன்னு ரைத்தவாறுரைத்துக்கொள்க. ஒருங்கிருக்குஞ் சாதி என ஈண்டும் ஒட்டுக. குற்றமின்று, தி பரிசத்தோ டொருங்கிருப்பதாவதே சாலுதலான். (கக) கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே யுருவங் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரநால் விடயம். சா (இ-ள்) தேயுவாவது சுடும்பரிசமுடையது. அது நித்தம், அநித்தம் என இருவகைத்து. இத்தம் பரமாணுரூபம். அநித்தம் கா ரியரூபம்,மறித்தும், சரீர இந்திரிய விடயவேறுபாட்டால் மூவகை