உகூ தருக்கவிளக்கம். தாமையின், தேயுவின் கூறாதல் பெறப்பட்டதென்க. அதன்வெம் மைப்பரிசமும் ஒளிரும்வெண்மையும் புலப்படாமை, அதனைப் பொ திந்த பிருதிவிக்கூற்றினுருவமும் பரிசமும் அவற்றைத் தடுத்தலா னென்க. ஆண்டு - தழல்கூடிய வழி, பொன்மைநிறமுடைய என்பது அனுமானங் கூறியவாறு. என்னை பெறுதும் எனின் காட்டுதும். அழிவுபடாத நெகிழ்ச்சி ஏது,பொன்மைநிறமுடைய திரவியம் பக்கம், அஃதாவது ஐயுற்றுத்துணியும் பொருட்கிடன், நெகிழ்ச்சி யுடைத்திரவியம் வேறொன்று உண்டெனல்வேண்டும் மேற்கோள் எனக்கருதக் கிடத்தலின் என்க.
- வேறொன்று என்பது பிருதிவி, பொன்மை நிறமுடையது என்
னும் இரண்டுமல்லாத பிறிதொன்று. தடுப்பது பொன்மை நிறமு டையதே என்றாலோஎனின்;- அற்றன்று, துணிபொருட் கிடனா வதைத் துணிபொருள் என்பது பொருந்தாமையொடு அவ்வாறு கூறுதற்கு முன்னர்ப்பெறப்படும் துணிவு மாறுகொள்ளுமாகலான். துணிவாவது பொன்மைநிறமுடையது பிருதிவியின் கூறுமுடைத் தாகலின் தேயுவன்று என்பது.
- வேண்டுவது நெகிழ்ச்சியுடைத் திரவியமாகற்பாற்று; அன்றா
யின், நெகிழ்ச்சி அழிவுபடாமற்றடுக்கப்படுவதின்மையான்.
- பொன்மைநிறமுடைய திரவியமாவது பிருதிவியின் கூறும்
தேயுவின்கூறும் கூடியாயதொன்று எனக்கொள்ளக் கிடத்தல் காண்க. கஉ வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே யூற்றங் கவர்வது மீந்தோ லென்க