உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். யழிவன வாமல் லவற்றியல் பாகி யழிவன வழியில் வாம்பொருட் கேற்ப. (இ-ள்) உருவமுதலிய நான்கும் பிருதிவியிற்பாகத்தாற்றோன்று வனவாய், அநித்தமாயிருக்கும், மற்றவற்றிற் பாகத்தானன்றி இயல் பாய், நித்தமும் அரித்தமுமாயிருக்கும். நித்தப்பொருளைச் சேர்ந்த வை நித்தம். அநித்தப்பொருளைச்சேர்ந்தவை அநித்தம். எ-று 'பாகத்தான்' எ-து. பாகந்தேயுவின் கூட்டம். அதனான் முன் னுருவமழிந்து வேற்றுருவந்தோன்றுமென்றவாறு. ஈண்டுப்பாகம் பரமாணுக்களுக்கே, துவியணுகமுதலியவற்றிற்கன்று. ஆதலாற்பா கமாங்காறும் சுள்ளையின் வைத்த குடத்திற் பரமாணுக்களுக்கு வேற்றுருவமுண்டாயவழிப் பசுங்குடங்கெட்டு மீளத்து வியணுகர் தோன்றுதல் முதலிய முறையானே செங்குடம் பிறக்கும். ஆண்டுப் பரமாணுக்கள் சமவாயிகாரணம், தேயுவின்கூட்டம் அசமவாயிகா ரணம், ஊழ்முதலியன நிமித்தகாரணம். துவியணுகமுதலியவற்றின் உருவத்திற்குக் காரணவுருவம் அசமவாயிகாரணமென்பர் பீலுபா கவாதிகளாகிய வைசேடிகர். பீலு அணுவென்பன ஒருபொருட்கி ளவி. முற்குடத்துக்குக் கேடின்றியே பரமாணுமுடிவான அவய வங்களிலும் அவயவியினும் ஒருங்கே வேற்றுருவம் பிறக்குமென்பர் பிடம்பாகவாதிகளாகியநையாயிகர். பிருதிவியின் பரமாணுக்களின் உருவமுதலியன அநித்தமென்றதூஉம் இதனானே யென்பதாம். 'மற்ற வற்றின்' எ-து.நீர்முதலியவற்றினென்றவாறு. 'நித்தப்பொருளைச் சேர்ந்தவை' எ-து பரமாணுக்களைச் சேர்ந்தவையென் றன்று. 'அநீ த்தப்பொருளைச் சேர்ந்தவை' எ-து. துவியணுக முதலியவற்றைச் சேர்ந்தவையென்றவாறு, உருவமுதலிய நான்கும் உற்பூதமாயுள்ளன காட்சிக்குப் புலனாம்,உற்பூதமல்லாதவை காட்சிக்குப் புலனாகா வெனக்கொள்க. உற்பூதத்தன்மையாவது காட்சியைப் பயப்ப