கூஉ தருக்கவிளக்கம். அனுமிதியென்க. வியாத்தி யாண்டுப் புகை ஆண்டுத்தீ ' என நியத் மான உடனிகழ்ச்சி. பக்கதருமத்தன்மை வியாப்பியமான புகை மலை முதலிய பக்கத்தினிருத்தல். எ - று.
- வியாத்தி யடுத்த, இதன்பொருள் முன்னுரையின் வருங் கா
ண்க. தருமம் என்றொழியாது தருமத்தன்மை எனத்தன்மைமேல் வைத்துக் கூறியது அத்தன்மை உடையதனைத்தும் உள்ளுறுத்தற் பொருட்டு. இவ்வாறு கூறுவது இந்நூற்கோர் மரபாவதறிக. றது. இனி அனுமானம்.எ து. அனுமானவிலக்கணங்கூறுகின் அனுமிதி.எ - து.அனுமிதியிலக்கணங் கூறுகின்றது. அற் றேல், 'குற்றியோ மகனோ' என்னும் ஐயத்தின் பின்னர் 'மகன்மை யான் வியாபிக்கப்படுங் கை கான்முதலியன வுடையன் இவன்' என்னும் ஆராய்ச்சியான் 'மகனே' என்னுங் காட்சியுணர்வு பயத் தலின் ஆண்டு அனுமிதியுணர்வே பயப்பதெனின், 'மகனைப் புலப் படக்காண்கின்றேன்' எனப்பின்னிகழுமுணர்விற்கு மாறு கோட லின், அதன் ஆராய்ச்சியாற்றோன்றும் ஞானம்' என்னும் இலக்க ணத்திற்கு ஐயத்தின் பின்னர்த்தாகிய காட்சிக்கண் அதிவியாத்தி வருமாலோவெனின்;- அற்றன்று, பக்கத்தன்மையோடு கூடிய ஆராய்ச்சியாற் றோன்றும் ஞானமென்பது கருத்தாகலின். பக்கத் தன்மையாவது துணிதல் வேட்கையில்லாமையோடு கூடிய துணி பொருட்பெறுதியின்மை. துணிபொருட்பெறுதி அனுமிதியுணர் விற்குத்தடை, துணிதல்வேட்கை அதற்குமாற்று, பெறுதியுள்ளவ ழியும் 'அனுமிப்பேன்' என்னும் வேட்கையான் அனுமிதியுணர்வு நிகழக் காண்டலின், நெருப்பின் சூட்டைத்தடுப்பதுமணி, அதற்கு மாற்று மந்திரமாதல்போலுமென்க. எனவே, மாற்றின்மையொடு