தருக்கவிளக்கம். தன்மையுடையதனைத்தும் உள்ளுறுத்தற்பொருட்டுத் தன்மைமேல் வைத்துக் கூறுமரபு 'பொதுமைச்சாதி உணரப்படுதலின் எல்லாப் புகைதீக்களினுணர்வும் நிகழும்" என்பதனானுமுணர்க. கூ. பிறர்க்கா ராய்ச்சி பேசிற் றான்முன் றொடரே துவினாற் றுணிவுற் றுணர்வைப் பிறருணர் தற்குப் பேணைந் துறுப்பார் தொடர்மொழி தன்னைச் சொல்லுவ தென்ப. (இ - ள்.) பிறர்பொருட்டனுமானமாவது தான் புகையால் வன்னியை அனுமித்து, பிறர் உணர்தற்பொருட்டு ஐவகையுறுப்புக் களையுடைய வாக்கியத்தைக் கூறுவது.வாக்கியமெனினும் தொ டர்மொழியெனினும் ஒக்கும். அது மலை தீயுடைத்து, புகையுடை மையால், யாது யாது புகையுடைத்து அது அது தீ யுடைத்து அடுக்களைபோல, இதுவும் அங்ஙனம், ஆதலின் இங்ஙனம்,என வரும். இதனாந் கூறப்பட்ட இலிங்கத்தாற் பிறருந் தீயுண்டெனத் தெளிவர்.(எ-று.)
- அங்ஙனமாவது அடுக்களை உடையதுபோலுடையது. இங்ங
னமாவது துணிபொருளை உடைத்தாவது என்பதரம். பிறர்பொருட்டனுமானம். எ-து, பிறர்பொருட்டனுமானங் கூறுகின்றது. அது .எ-து. ஐவகை யுறுப்புக்களையுடைய வாக்கியத்திற்கு உதாரணங்கூறுகின்றது. ரு0. கோதி லைவகை யுறுப்பவை கூறி னேது மேற்கோ ளெடுத்துக் காட்டோ டாகுப நயமென் றறைகாட் டொன்றி