தருக்கவிளக்கம். காசு. ஏர்பே றிலதெ னேது விளம்பிற் சார்பி லாமை சாற்றுரு வின்மை மிடைநிறை வின்மை மேவு மூன்றாம். (இ - ள்.) இனி அசித்தமென்னும் எதுப்போலி சார்பசித்தம், உருவசித்தம், வியாப்பியத்தன்மையசித்தம் என மூவகைப்படும். - து. இளி அசித்தம்.எ- து. அசித்தத்தைப் பகுக்கின்றது. கரு. சார்பி லேது சாற்றிற் றுணிபொருட் கேரிட னின்மையி னிடன்றனக் கிலதே. (இ-ள்.) அவற்றுள், சார்பசித்தமாவது 'ஆகாயத்தாமரை மண முடைத்து, தாமரைத்தன்மையால், பொய்கைத்தாமரை போலும்' எனவரும். ஈண்டு மணமுடைமைக்கு ஆகாயத்தாமரை சார்பு அதுவே இல்லை.எ - று. அவற்றுள், சார்பு. எ - து.சார்பசித்தத்திற்குதாரணங் கூறு கின்றது. காசு. உருவி லேது வோரி னிடத்திற் குருல மாகா துறுவது தானே. (இ-ள்.) உருவசித்தமாவது சொரூபாசித்தம் : அஃதெங்ஙனம், 'சத்தம் குணம், கண்ணுக்குப்புலனாதலின்' எனவரும். ஈண்டுக் கட் புலனாதல் சத்தத்திற்கின்று, சத்தம் செவிக்குப்புலனாதலின். எ-று. உருவசித்தம். எ-து. உருவசித்தத்திற்கு உதாரணங்கூறு கின்றது.
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/80
Appearance