கூவு தருக்கவிளக்கம். யனுபவம், முயன்றுசென்றது பயப்படச்செய்தலின். 'யாதுமெய் யனுபவமன்று அது பயப்படச்செய்யாது, பொய்யனுபவம் போ லும்' என்னுங் கேவலவெதிரேகி யனுமானத்தான் மெய்யனுபவத் தன்மை தெளியப்படும். இரண்டாவது நிகழ்வது முதலிய ஞானக் களின் முன்னைஞானம் திருட்டாந்தமாதலுண்மையான், அதன் சாதியுடைமையாகிய இலிங்கத்தானே அந்நுவயவெதிரேகியனுமா னத்தானுந் தெளியப்படும். மெய்யனுபவத் தோற்றத்தின்கட் பிறி தானாதல் குணத்தானுண்டாதற் பாலதாதல். மெய்யனுபவத்திற் குச் சிறந்த காரணம் குணம்,பொய்யனுபவத்திற்குச் சிறந்த கார ணம் குற்றம், அவற்றுள், காட்சியுணர்வின்கட் குணம் விசேடணத் தையுடைய விசேடியத்தின் சம்பந்தம், அனுமிதிக்கட்குணம் வியா பகமுடையதன்கண் வியாப்பியமென்னு முணர்வு, உவயிதிக்கட் குணம் மெய்யான ஒப்புமையுணர்வு, சத்தவுணர்வின் கட்குணம் மெய்யான தகுதி முதலியவற்றினுணர்வு என்னுமின்னோரன்ன பிறவும் ஆராய்ந்துணர்ந்துகொள்க. முன்னர்த்தோன்றாகின்ற உரு விற் பிரகாரமின்மை பின்முயற்சியினுணரப்படாமையின், பொய் யனுபவமாதல் பிறிதானுணர்தற் பாலதேயாம். தோற்றத்தின்கட் பிறிதானாதல் பித்தமுதலிய குற்றத்தான் உண்டாகற்பாலதாதல். அற்றேல், பொய்யுணர் வென்பதேயில்லை அனைத்துணர்வும் மெய் யாகலின், இப்பியின்கண் இதுவெள்ளி' என்னுமுணர்வான் முயற்சி நிகழக்காண்டலின் மலைவுண்டு என்பது கூடாது. வெள்ளியி னினைவும் முன்னர்த்தோன்றா நின்றதனுணர்வும் என்னும் இரண் டானுமே முயற்சி நிகழ்தல் கூடுமாகலின், முன்னர்த்தோன்றிய தன்கண் வேறுபாடு தோன்றாமையே யாண்டும் முயற்சி பிறப்பித்த லான், 'இது வெள்ளியன்று' என்பது முதலியவற்றின் மிகைப் பாடின்மையான் எனின்;- அற்றன்று, மெய்யாகிய வெள்ளியிட த்துமுன்னர்த் தோன்றாநின்றது விசேடியமாகவும் வெள்ளித்தன் 2
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/98
Appearance