பக்கம்:அழகர் கோயில்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 179 பாகவத அம்மானை ஆசிரியருக்கும், வர்ணிப்பு ஆசிரியர் களுக்கும் சொற்களைப் பயன்படுத்தும் முறையிலும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. நாட்டுப்புற மக்களின் உணர்வலைகளை அவர்கள் பயன்படுத்தும் சொற்களிலேயே கவிதையாக்குவதும் ஓசை வரம்பையே யாப்பு வரம்பாகக் கொண்டு பாடுவதும் இவர்கள் நாட்டுப்புறக் கவிஞர்கள் என்பதைக் காட்டுகின்றன. செவ்வைச் சூடுவாரின் பாடல்களையே எளிய நடைக்கு மாற்றினாலும் பாகவதம்மானை ஆசிரியர்க்கு வங்கிஷம், கெப்பிரம் கெற்பம், திரியோதன ராஜன், அன்புவைத்துக் கேளும், சொல்லக் கேளும் முதலிய பேச்சுமொழிச் சொற்களையும் சொல்லமைப்பையும் தவிர்க்க முடியவில்லை. கார்த்தாய், மாயனுட கதை, துகை, பேய்ரம்பை (ஸ்ரீ கிருஷ் ணாவதாரன் வர்ணிப்பு) களவாண்டு, திரியோதரன், தேவாமுர்தம் (கூர்மாவதாரன் வர்ணிப்பு) சருபேஸ்வரன், தெண்டித்து, ஆச்சியர் (பெரிய அழகர் வர்ணிப்பு), தொழுவு, கெந்திருவாள், கருவேலம் (அழகர் வர்ணிப்பு (1)), முதலிய பேச்சு வழக்குச் சொற்களை வர்ணிப்பு நூல்களில் நிறையக் காணலாம். வர்ணிப்புப் பாடல்களில் ஓரிரண்டு சொற்களில் அல்லது ஓரிரண்டு அடிகளில் கண்ணனது பெருமையாகப் பேசப்படுவன வெல்லாம் அவனது ஆய்ப்பாடித் திருவிளையாடல்களே. கண்ணள் ஆய்ப்பாடி வருதல், பூதனையாள் முத்தி பெறுதல், கண்ணன் சகடமுதைத்தல், மருதிடைத் தவழ்தல், அரவின்மேலாடல், கோவியர் துகில் கவர்தல், குன்று குடையாக எடுத்தல், மஞ்தனைக் கொல்லல் ஆகிய நிகழ்ச்சிகளே வர்ணிப்புப் பாடல்களில் மீண்டும் மீண்டும் பேசப் படுவனவாகும். இவையனைத்தும், சங்கரமூர்த்திக்கோனாரின் முதற் பாகவத அம்மானையின் கந்தத்தில் (பாகவதத்தின் பத்தாம் கந்தம்) தனித்தனி அத்தியாயங்களாக விரித்துப் பாடப் பட்டுள்ளன. பாகவத அம்மானையையும், வர்ணிப்புப் பாடல்களையும் ஒப்பிட்டு தோக்கும்போது நமக்குக் கிடைக்கின்ற செய்நி இதுவே யாகும் : கண்ணனின் திருவிளையாட்டுச் செய்திகள் நாட்டுப்புற மக்கள் அறியாதவையல்ல. எனினும் கதைகளின் நுணுக்கமான சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/186&oldid=1468059" இலிருந்து மீள்விக்கப்பட்டது