பக்கம்:அழகர் கோயில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் அமைப்பு 18 சன்னிதியாகும். இரண்டாம் திருச்சுற்றில் தென்பகுதியில் வடதிசை யிலுள்ள சீண்களில் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தவர் களின் சிலைகள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் வடக்கு நோக்கித் திரும்பும் இடத்தில் 'பள்ளியறை' உள்ளது. பள்ளியறைக்கு வடக்கே கருவறைக்கு நேர் பின்னாக உயர்ந்த ஒரு மண்டபத்தில் கிழக்கு நோக்கி 'யோகநரசிம்மர்' அமர்ந்துள்ளார். இவருக்கு "உக்கிர நரசிம்மர்', 'ஜ்வாலா நரசிம்மர்' முதலிய பெயர்களும் உண்டு. இவரது சினம் தணிய நாள்தோறும் இவர்க்கு எண்ணெய்க் காப் பிடுவர். இரண்டாம் திருச்சுற்றில் கிழக்குநோக்கித் திரும்புமிடத்தில் ஆண்டாள் சன்னிதி உள்ளது. அதற்கு முன்னால் யாகசாலையும், வாகன மண்டபங்களும் உள்ளன. 1. 12. ஆடிவீதியும் வசந்தமண்டபமும் : கலியாண மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றி வரும் நான்கு வீதிகளும் 'ஆடிவீதி' என்றும், 'யதிராஜன் திருவீதி' என்றும் வழங் கப்பெறும், ஆடித்திருநாட்களில் இறைவன் இவ்வீதி வழியே வரு வார். தென்திசையிலுள்ள ஆடிவீதியில் கோயில் இராஜகோபுர மதிலில் ஒரு வாசல் உள்ளது. இவ்வாசலின் வழியே தெற்குநோக்கி இறங்கினால் இக்கோயில் வசந்தமண்டபத்தை அடையலாம். வசந்த மண்டபத்தின் நடுவில் நீராழிமண்டபம் போல் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்தத்திருவிழா நாட் களில் இறைவன் நாள்தோறும் எழுந்தருளுவார். இவ்வசந்த மண்ட பத்தின் மேற்கூரை முழுவதும் நாயக்கராட்சிக்கால ஓவியங்கள் காணப்படுகின்றன; இவ்வோவியங்கள் இராமாயணக் கதைகளைச் சித்திரிக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அக்காட்சி நாயக்கர் காலத் தமிழ் எழுத்தில் ஓரிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுள்ளது. 1.13. ராயகோபுரம் : வசந்த மண்டபத்திற்குக் கிழக்கே சற்றுத் தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் பாதியிலே நின்றுபோன ஒரு கோபுரம் தெற்குநோக்கி அமைந்துள்ளது. இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசயநகர மன்னர் களின் ஆரவீடு வம்சத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட் டின் காலம் சகம் 1468 (கி. பி. 1546) ஆம் ஆண்டாகும். 4 எனவே கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றுப் பாதியிலே நின்றுபோன இக்கோபுரத் திருப்பணியைப் பின்வந்த மன்னர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/20&oldid=1467875" இலிருந்து மீள்விக்கப்பட்டது