பக்கம்:அழகர் கோயில்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 201 யாடல்களைச் சிலர் பாடுகின்றனர். பெரும்பாலும் தொடக்கமும் முடிவுமில்லாது ஏதேனும் ஒரு வருணிப்புப் பாடலில் அங்குமிங்குமாகச் சில அடிகளையே பாடுகின்றனர். அழகர் வர்ணிப்பு, கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு முதலிய அச்சிடப்பட்டுள்ள வாய்மொழிப்பாடல் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு சிலர் பாடுகின்றனர். நாட்டுப்புற மக்களின் நினைவாற்றல் (folk-memory) வருணிப்புப் பாடல்களைப் பொறுத்த மட்டில் பெருமளவு அழிந்துவிட்டதெனலாம். 9.7. திருக்கண்களும் கலையுணர்வும்: அழகர் பல்லக்கு அழகர்கோயில் தொடங்கி வழிநெடுகத் தனி யார்களாலும், சாதிச்சார்பாகவும், கிராமச்சார்பாகவும் அமைக்கப் பட்டிருக்கும் 'திருக்கண்'களில் ஓரிரு திமிடங்கள் தங்கிச் செல்லும். நிரந்தரமான கல்மண்டபங்களாகவோ, தற்காலிகமாக அமைக்கப் பட்ட கொட்டகைகளாகவோ இவை இருக்கும். இறைவன் அமர்ந்து அடியார்களுக்குத் திருக்கண் அருள் பாலிப்பதால், இவற்றுக்குத் 'திருக்கண்கள்' எனும் பெயர் வந்திருக்கலாம். 'கண்' எனும் சொல் இடப்பொருண்மையினை உணர்த்துவதாகவும், 'திரு' எனும் சொல் இறைமைத் தன்மையினை உணர்த்துவதாகவும் பொருள்கொண்டு இறைவன் தங்கும் இடம்' என்றும் இச்சொல்லுக்குப் பொருள் கொள்ள முடிகிறது. அழகர்கோயில் தொடங்கி வண்டியூர்ப் பெருமாள்கோயில் வரை தற்போதுள்ள திருக்கண்களின் எண்ணிக்கை 321 என்று கோயில் அலுவலகத்தார் தெரிவிக்கின்றனர். வண்டியூர் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும்போதும் ஆக இருமுறை இத்திருக் கண்களில் அழகர் அமர்ந்துசெல்வார். இத்திருக்கண்களின் அலங் காரம் தாட்டுப்புறக் கலைஉணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வாழைமரங்களாலும், கமுகங்குலைகள், பனங்குலைகள், தென்னம் பாளைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் முதலியவற் றாலும், சில இடங்களில் கரும்பினாலும் இவை அணிசெய்யப் பெற்றிருக்கும். கொட்டகைக் கால்கள் வெளியிலே தெரியாவண்ணம் தரையிலிருந்து ஆறடி உயரத்திற்குக் கரும்பினைச் சார்த்திக்கட்டி, அதன்மேல் மும்மூன்றடிகள் உயரத்துக்கு முறையே பனங்குலை, தென்னங்குலை, வாழைக்குலை இவற்றைச் சுற்றித் தைக்கப்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/208&oldid=1468081" இலிருந்து மீள்விக்கப்பட்டது