பக்கம்:அழகர் கோயில்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 9.13. தமிழ்நாட்டு வைணவம்-சில சான்றுகள்: 207 ஆய்வாளர் 21, 22.2 1978 இல் கோவை மாவட்டம் காலம மடையிலும், 11.3.1979இல் தென்னார்காடு மாவட்டம் திருமுட்டத் திலும் (ஸ்ரீமுஷ்ணம்), 13.3.1979இல் காரைக்காலையடுத்த திருமலை ராயன்பட்டினத்திலும் நடத்திய கனஆய்வுகள் இவ்வையத்தினைத் தீர்த்துவைக்கின்றன. கோவை மாவட்டம் காரைமடை ரங்கநாதர் கோயிலில் மாசி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில் இருளர், படகர் ஆகிய மலைச்சாதியினரும் போயர் (கொத்து வேலை செய்வோர்). மாதாரி (பறையரைப் போன்ற உழுதொழி லாளர் ) தாசபளஞ்சிக செட்டியார் ஆகிய சாதியினர் பெருவாரி யாகக் கலந்துகொள்கின்றனர். அழகர்கோயிலைப் போலவே இவ்வைணவக்கோயிலிலும் அடியவர்கள் திரி எடுத்து, சாமியாடு கின்றனர். திரி வளைந்ததாக உள்ளது; தோளில் தொங்கவிட்டுக் கொள்கின்றனர் (படம்: 29).ஆட்டுத்தோற் பைகளில் கோயில் தெப்பக்குளத்திலிருந்து நீரெடுத்துவந்து கோயில் திருச்சுற்றில் விடுகின்றனர். நேர்த்திக் கடனுக்காக நூறு அல்லது இருநூறு முறை இவ்வாறு செய்கின்றனர். தென்கலைத்திருமண் அணிந்து துளசிமாலையினைக் கொத்தாக மார்பிலணிந்து கையிற் சிறுபிரம் பொன்றேந்திப் பறை, மேளங்களுடன் சிலர் சாமியாடுகின்றனர். சாமியாடி வருவோர்க்கு அடியவர்சுள் 'கவாளம்' கொடுக்கின்றனர். 'கவாளம்' என்பது பலவகைப் பழங்களைச் சருக்கரை வெல்லத் துடன் சேர்த்துப் பிசைந்த உருண்டையாகும். சாமியாடிகள் சாலையில் நடந்து வரும்போது கவாளத்தைச் சாமியாடிகள் வாயில் ஊட்டுவது 'நடைகவாளம்‘ எனப்படுகிறது. சாலையில் ஓரிடத்தில் அல்லது கோயில்முன் ஒரு வெள்ளைத் துணியில் (மாற்று) இரண்டு மூன்று கவாளங்களை வைத்துவிடு கின்றனர். சாமியாடி வருவோர், தரையில் முழங்காலிட்டு, கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு, துணியில் வைக்கப்பட்ட கவாளங்களை வாயினால் கவ்வி எடுக்கின்றனர். இதற்கு 'மாற்றுக் கவாளம்' என்று பெயர். கவாளம் எடுக்கும் தாசர்களில் சாதி வேறுபாடு இல்லை (படம்: 30).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/214&oldid=1468088" இலிருந்து மீள்விக்கப்பட்டது