பக்கம்:அழகர் கோயில்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 243 (compromise) மிகப்பெரிய சாதனையை நமக்குக் காட்டுகின்றன. நம் முன்னோர்கள் தங்கள் தகுதிநிலைக்கு (standard) மக்களை எப்படி ஈர்ப்பது என அறிந்திருந்தனர்" என்பது அவர் கருத்தாகும். 39 11.15. வழிபாட்டின் வளர்ச்சி : ஆய்வாளருக்குக் கிடைத்த ஒரு வர்ணிப்புப் பாடல், சந்தனக் கருப்பன். சங்கிலிக்கருப்பன், காளாங்கிக் கருப்பன், ஊமைக்கருப்பன், நேரடிக்கருப்பன், பெரியகருப்பன் என எழு பெயர்களைத் தருகிறது.50 கே என். இராதாகிருஷ்ணன், பெரியகருப்.என். சின்னக்கருப்பன் மண்டைக்கருப்பன், சங்கிலிக்கருப்பன்,தொட்டிக்கருப்பன், கும்மட்டிக் கருப்பன், பழையகருப்பன் முதலியன கருப்பசாமியின் பல்வேறு கூறுகளாகும்" என்பர்.57 கருப்பசாமி வழிபாட்டின் வளர்ச்சியீளையே இப்பெயர் வேறு பாடுகள் காட்டுகின்றன. அந்தந்த வட்டாரந்துக்குரிய சில பண்பு களை ஏற்றுக்கொண்டு இப்பெயர் வேறுபாடுகளோடு கருப்பசாமி வழிபாடு பரந்து வளர்ந்திருக்கிறது. 11.16. இரண்டு கருத்துக்கள் : 11.16.1. காவல் தெய்வம் : என காவல் கண்மாய்க்கரை, கணவாய், மந்தை, கோட்டை ஆகிய இடங்களில் உறையும் கருப்பசாமி முறையே கண்மாய்க்கருப்பசாமி, கணவாய்க்கருப்பசாமி, மத்தைக்கருப்பசாமி. கோட்டைக்கருப்பசாமி இருக்குமிடத்தால் பெயர்பெறுகின்றார். இவையனைத்தும் காப்போர் இருக்கு காப்பதற்குரிய இடங்கள்; காவல் மிடங்கள். எனவே கருப்பசாமி காவல் தெய்வமாகவே (guardiaa deity) கருதப்படுகிறார் என்று சந்திரமூர்த்தியும் வேதாசலமும் கருது சின்றனர். 68 இக்கருத்து ஏற்புடையதாகவே நோன்றுகிறது. திருமால் காத்தலாகிய தொழில்செய்யும் கடவுள் என்ற கருத்தும், கருப்பசாமி காவல் தெய்வமாகக் கருதப்படுவதும் வியூக வழிபாட்டில் காரி (வாசுதேவ கிருஷ்ணன்) வழிபாடே கருப்பசாமி வழிபாடாயிற்று என்ற கருத்தினை மேலும் வலிவாக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/250&oldid=1468124" இலிருந்து மீள்விக்கப்பட்டது