பக்கம்:அழகர் கோயில்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 245 ஒன்றிரண்டின் பிரதிநிதியாகச் சில சிறுதெய்வங்கள் தோன்றியுள்ளன என்று கருதலாம். பழைய வழிபாட்டுநெறிகள் வலிமையினால் அழிக்கப்பட வில்லை. அவை தன்மயமாக்கப்பட்டன" என்று கோசாம்பி கூறும் கருத்தும், 65 முற்கூறிய கருத்தை அரண் செய்கிறது. தமிழ்நாட்டில் காரி வழிபாடும், காபாலிகரின் சிவவழிபாடும் இன்று காணப்படவில்லை. எனினும் அவை சிறுதெய்வ நெறிகளால் தன்மயமாக்கப்பட்டு, புதிய வடிவங்களைத் தந்துள்ளன என்று கருதலாம். சைவ கருப்பசாமி ஒரு காவல் தெய்வம்' என்ற கருத்தும், காரி வழிபாட்டிலிருந்து பிறந்த கருப்பசாமிக்குச் சுடலைமாடன் இணையாகலாம் என்ற கருத்தும் கருப்பசாமியின் தோற்றம் குறித்து முற்கூறிய கருத்தை வலியுறுத்தவே துணைசெய்கின்றன. குறிப்புகள் 1.ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு, ப.42. 2. மேலது, ப. 42. 3. ராக்காயி வர்ணிப்பு, ஆரப்பாளையம் மாரியப்பன் பாடியது, பார்க்க: பிற்சேர்க்கை எண் 1] : 7, வரிசுன் 224-242. 4. K.N.Radhakrishna, Thirumalirunjolaimalai (Alagarkoil) Sthalapurana, p. 211. 5. ராக்காயி வர்ணிப்பு, அடி, 1. 6. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, பார்க்க : பிற்சோக்கை எண் II : 5, வரி 1, 7. தகவல்: பெரியமஞ்சாக் கவுண்டர், ஆமந்தூர்ப்பட்டி, நான் : 30-7-77. 8. தகவல்: அழகு, மேலமடை, நான் : 29.7-177. 9. K. N. Radhakrishna, op. cit. pp. 213-214. 10. ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு, ப. 43. 11. பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, பார்க்க : பிற்சேர்க்கை எண் 11: 5,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/252&oldid=1468129" இலிருந்து மீள்விக்கப்பட்டது