பக்கம்:அழகர் கோயில்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கல்வெட்டுக் குறிப்புகள் 277 இரண்டாம் திருச்சுற்றில் தூண்களால் மறைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டினால் '(குல)சேகரன் சந்தி' என்னும் ஒரு பூசை மாறவர்மன் இக்கோயிலில் நடைபெற்றதை அறியமுடிகிறது. 26 இரண்டாம் சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்றால் அரசன் பெய ரால் ஒரு பூசை 'சுந்தரபாண்டியன் சந்தி' என்ற பெயரில் நியீ வப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் மற்றொரு கல் வெட்டின் மூலம் 'போசள வீரசோமதேவன் சந்தி'க்கு, கேரள சிங்க வளநாட்டுத் திருக்கோட்டியூரில் சில நிலங்கள் நிவந்தமாக அளி. கப்பட்ட செய்தியை அறியலாம்.18 பாண்டிய ஸ்ரீவல்ல!ப} தேவன் காலந்துக் கல்வெட்டொன்று, குடநாட்டுக் கொற்கையூருடையான் தமிழபல்லவதரையனான அழ காண்டார், தன் தங்கைக்காசு ஆனி மாத விசாக நட்சத்திரத்தில் இறைவனைச் சுந்தரபாண்டியன் மண்டபத்தில் எழுந்தருளச் செய் வதற்காகக் குஞ்சரங்குடி என்ற சிற்றூரை வாங்கி நிவந்தமாக அளித்த செய்தியைக் கூறுகிறது.19 8. தமிழ்ப் பாசுரங்கள் குறிப்பு : இக்கல்வெட்டு தரும் மற்றொரு செய்தி, இக்கோயில் இறைவன் நியாகஞ்சிறியான் திருவீதியில் தேர்மீது வீற்றிருந்து சடகோபன் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இருஞ்சிறையுடையான் சுந்தரத்தோளுடையான் என்பவனுக்கும் அவன் வழியினருக்கும் சுந்தரத்தோள்விளாகம் என்னும் ஊரின் 'காராண்மை' உரிமையை அளித்தார் என்பதாகும்.10 கோயில் அதிகாரிகள் செய்த முடிவு இறைவனின் ஆணையாகக் கல்வெட்டில் குறிக்கப்பட்டது போலும் தேர் தியாகஞ்சிறியான் வீதிக்கு வரும்போது, சடகோபள் பாடல்களை (நம்மாழ்வார் பாசுரங்களை) ஓதும் வழக்கமிருந்த செய்தியை இக் கல்வெட்டால் அறியலாம். மற்றுமொரு கல்வெட்டு இக்கோயிலில் இறைவன் திருமுன் 'கோதைப்பாட்டு' (ஆண்டாளின் பாசுரங்கள்) ஓதப்பெற்ற செய்தியைத தெரிவிக்கிறது. 31 9. மடங்கள் : இக்கோயிலையொட்டி இங்கிருந்த மடங்களைக் குறித்துச் சில கல்வெட்டுகள் செய்திகளைத் தருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/284&oldid=1468161" இலிருந்து மீள்விக்கப்பட்டது