பக்கம்:அழகர் கோயில்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

290 அழகர்கோயில் காவலுடன் நானிருப்பேன் செருபூபதியே நீங்கள் கலவைநதி போங்களென ஆவலுடன் செங்கமலன் மஞ்சநதி ராக்குரைக்க திருமாலும் 30 தாமோதரக் கண்ணன் தானமலர்த் தண்டியலைத் தான்தூக்கி வாங்களென்றார். போய் வாரேனென்று சொல்லி சேவகரும் மாறணமைக்காரரும் பல்லற்கைத் தூக்கி பட்டர் வலம் புரிச் சங்கூதிடவே நாட்டார்கள் கொர்பூத் சேகண்டி நாதம் நாலுதிக்கும் தான் முழங்க கோர்ட்டார்கள் கூடிவர காட்டுப் பிள்ளையாரிடத்தில் கூறிய சேதிகளை நடந்தார் பெருமாளும் பொய்கைக் கரைப்பட்டி கலவநதியும் நல்லதென்று கடந்து 35 தடத்தார் பெருமாளும் நல்லதென்று கள்ளரெல்லாம் நாதனை எதிர்பார்த்து நிற்க கூடினார் கள்ளரெல்லாம் கோவிந்தனைப் பார்த்து குலவையிட்டு ஆடினார் நாட்டார்கள் தமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் இது நல்லதென்று பல்லாக்கைத் தாளிறுத்தி ஆபரணத்தைக் கழத்தி அவர் பட்டய மெல்லாம் பறிக்க எல்லாத் திருக்கூத்தும் பரமசாமிபட்டர் பட்ட இடையூறெல்லாம் நினைந்து 40 மாலழகா பூந்துளபா உலகமதை உண்ட மாதவனே கோவிந்தா சீதரனே கார்மேகம் இங்கு நடந்த தீதுனக்குச் சம்மதமோ பதறியே கை நடுங்கிப் பரமசாமிப்பட்டர் பகவான்முகம் பார்த்த வுடன் சிதறியே பொறிபறக்க கண்விழித்துப் பார்க்க திடுக்கிட்டுக் கள்ளரெல்லாம் இருட்டடைந்து எல்லோரும் கண்ணு தெரியாமல் ஏங்கிமுகம் வாடிதின்று 45 குருட்டடைய வைத்த மாதவா கோவிந்தா எங்கள் குலமுழுதும் நீ காப்பாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/297&oldid=1468175" இலிருந்து மீள்விக்கப்பட்டது