பக்கம்:அழகர் கோயில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 அழகர்கோயில் செல்லல், தேனூர் மண்டபம் செல்லல், வாணவேடிக்கை நடை பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளையும், துருந்திநீர் தெளிப்போர், திரியெடுத்தாடுவோர் ஆகியோரையும் குறிப்பிடுகின்றது. 12 ஆனால் அழகர் கள்வர் வேடம் பூண்டு வரும் செய்தி குறிக்கப்படவில்லை. கோயில் திருவிழா அழைப்பிதழின்படி அழகர் மதுரை வருவதன் நோக்கங்கள் திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையினைச் சூடுவதும், மண்டூக முனிவருக்கு முக்தி தருவதும் ஆகும். 10 தூது நூலில் மண்டபத்துக்கு அழகர் செல்வதைக் குறிக்கும் புலவர், மண்டூக முனிவருக்கு முத்தி தரும் திருவிழா நிகழ்ச்சியினைப் பாடவில்லை. ஆண்டாள் சூடிக் கொடுத்துவிட்ட மாலையினை அழகர் சூடுவதை ஓரிடத்தில் குறித்தாலும்14 அதனைத் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பாடவில்லை. அழகர்மாலை ஒரே ஒரு இடத்தில் மட்டும், வையைப் பெருக்கிற் கருவூலத்தோடு வருமழகா என் அழகர் சித்திரைத் திருவிழாவில் வையை நதிக்குள் வருவதனைக் குறிக்கிறது.15 திருவிழாவின் பிற நிகழ்ச்சிகளைக் குறிக்கவில்லை. அழகர் வருகைப்பத்து நூலின் பெயரும், நூலின் இருபது பாடல்களும் ‘வருக வருகவே' என முடிவதும் சித்திரைத் திருவிழா விற்காக மதுரை வரும் அழகரை வரவேற்கும் முறையில் அமைந் திருக்கின்றன. இந்நூலும் திருவிழா நிகழ்ச்சி எதனையும் பாடவில்லை. இறைவனைப் போற்றிப் புகழும் பாடலாகவே உள்ளது. ஓரிடத்தில் மட்டும் அழகர் வையைநதி நோக்கி வருவதனை, ஆயாவருக வையைநதி அடையச் சேவை செய்பவர்க்கு மாயாப்பிறவி மாற்றி வைக்கும் வண்ணாவருக**76 என்க் குறிப்பிடுகிறது. 3:13. இலக்கியங்கள் ஒதுக்கிய செய்தி: இக்கோயிலோடு கள்ளர் சமூகத்துக்குரிய உறவு ஏறத்தாழப் பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஏற்பட்டது எனக் கருதலாம். பதினெட்டாம் நூற்றாண்டிலெழுந்த கிள்ளைவிடு தூது அழகர் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இவ்வுறவினைக் குறிப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/53&oldid=1467911" இலிருந்து மீள்விக்கப்பட்டது