பக்கம்:அழியா அழகு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அழியா அழகு

களும் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்றே அவன் ஆசைப்பட்டான், எவ்வளவு காலம் ஓரிடத்தில் தங்குவது' என்ற கேள்விக்கே இடம் இல்லை. அடியேமாகிய எங்க களிடையே தலைவனகிய எவ்வளவு காலமும் இருக்க லாம் என்பதைக் குறிப்பிப்பானைப் போல. "இனிதிரு கெடிது எம்மூர்' என்ருன்.

மேலும் குகன் பேசினன். அந்தப் பேச்சில் இராம அடைய பழக்க வழக்கங்களைக் கவனித்துத் தெரிந்து கொண்ட அறிவு பளிச்சிடுகிறது. தேனையும் மீனேயும் கொண்டுவந்தவன் இப்போது மீனே மறந்தான். 'தேவரும் நுகர்தற்குரிய தேனும் தினையும் இங்கே உண்டு; எம் உடலில் உயிருள்ள அளவும் காங்கள் பாதுகாக்க இருக் கிருேம்; விளையாடக் காடு இருக்கிறது; புனலாடக் கங்கை இருக்கிறது; கான் உள்ளவரையில் எம்பால் தாங்கள் இருக்கலாம்' என்ருன்.

"தேன்.உள தினஉண்டால்;

தேவரும் நுகர்தற்காம்: ஊன் உள துணைகாயேம்

உயிருள; விளையாடக் கானுள; புனலாடக்

கங்கையும் உளதன்ருே: நானுள தனையும் நீ

இனிதிரு கடனம்பால், ! "இங்கே மிக மெல்லிய தோல் இருக்கிறது; துகிலைப் போலவே கன்ரு இருக்கும்; அதை அணிந்து கொள்ள லாம், இன்பத்தைத் தரும் மஞ்சங்களைப் போலப் .பரண்கள் உள்ளன; அவற்றில் துயிலலாம். தனித்துப் பல இடங்கள் - குடிசைகள் - உள்ளன. எவ்வளவு நெடுங்

1. கங்கைப்.க. மனமாற்றம் என்ற கட்டுரையில் இப்பாட்டின் பொருள் தயங்களை முன்பே பார்த்தோம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/102&oldid=523304" இலிருந்து மீள்விக்கப்பட்டது