பக்கம்:அழியா அழகு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகொண்ட குகன் 97

வந்தான், இராமன் முனிவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சிதையோடும் இலக்குவைேடும் அதில் ஏறிஞன், மெய் உயிர் அனேயாளுகிய குகன், காவாயைச் செலுத்த அது அக்கரையை அடைந்தது. கரையில் இறங்கிய இராமன் குகனப் பார்த்து, 'சித்திர கூடத்துக்குப் போகும் வழி எது? சொல்" என்ருன்.

அப்போதும் குகனுக்குப் பிரிவுத்துன்பம் பொங்கியது. 'நாவாய் கொணர்க' என்றபோது உண்டான துயரம் இப்போது மீண்டும் தலை காட்டியது. இப்போதும் இரு விண்ணப்பத்தைச் சொல்ல முக்தின்ை.

இராமன்பால் குகனுக்கு உள்ள அன்பை இங்கே கம்பன் பக்தி என்ற சொல்லால் குறிக்கிருன். ஆத்ம சமர்ப் பணம் செய்யும் இராமபக்தன் ஆகிவிட்டான் குகன், பத்தி யின் உயிர் ஈயும் பரிவினன்' என்கிருன் கவிஞன். "இந்த அடிமை ஒன்று சொல்ல விழைகிறேன்" என்று இராமனே அடிபணிந்து குகன் சொல்லத் தொடங்கினன்:

அத்திசை உற்றையன்

அன்பன முகம்கோக்கி, 'சித்திர கூடத்திற்

செல்கெறி பகர்' என்னப் பத்தியின் உயிர்ஈயும் - பரிவினன், அடிதாழா,

"உத்தம! அடிநாயேன்

ஒதுவ துளது' என்ருன். ' (ஐயன் - இராமன். அன்பன் - குகன். கெறி வழி 1 மறபடியும் அவன் சொல்வதற்கு என்ன இருந்தது: இராமனைப் பிரிவதற்கு மனம் பொருந்தாமல் இருந்தான்

1. கங்கைப். 68

வ. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/105&oldid=523307" இலிருந்து மீள்விக்கப்பட்டது