பக்கம்:அழியா அழகு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அழியா அழகு

அகலிகைக்கு முன்னேயுருக் கொடுத்த தாள்வலி, அது இரண்டாம் அத்தியாயம். பின் வில்லை ஒடித்த அவன் கை வலிமையை யாவரும் கேரே கண்டார்கள்; அது மூன்ரும் அத்தியாயம்.

சீதையை இராமன் திருமணம் செய்துகொள்வதென்று: ரிச்சயமாயிற்று. ஊர் முழுவதும் இதே பேச்சு. பிள்ளையின் தகப்பனர் தாயார் இல்லாமல் கல்யாணம் நடத்தலாமா? ஜனகனுக்கு என்னவோ உடனே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று ஆசை. விசுவாமித்திரரைப்பார்த்துக 'இராமன் உங்கள் புதல்வன்தானே? விரைவில் இப்போதே ஒரு நாளில் மணம் முடித்துவிடலாமா? அந்த அரசனேயும் இங்கே அழைக்க வேண்டுமா? உங்கள் விருப்பம் யாது” என்று கேட்கிருன்.

"உரைசெய்எம் பெரும, உன் புதல்வன் வேள்விதான்' விரைவின்இன் ருெருபகல் முடித்தல் வேட்கையோ? முரசெறிக் ததிர்கழல் முழங்கு தானே அவ் வரசையும் இவ்வழி அழைத்தல் வேட்கையோ' '

(வேள்வி - மணம், பகல் - நாள். தானே . சேனே. வேட்கை - விருப்பம்:

"தசரதன் வரட்டும்' என்ருர் முனிவர். சக்கர வர்த்திக்குத் திருமணப் பத்திரிகை போகிறது.

2

தசரதன் வந்துவிட்டான். அவனேச் சக்திக்க இராமன் புறப்படுகிருன், மிதிலே வீதி வழியே அவன்

1. கார்முகப்.65.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/14&oldid=523216" இலிருந்து மீள்விக்கப்பட்டது