பக்கம்:அழியா அழகு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அழியா அழகு

இராமன் முடிசூட்டு விழா, வரையறையின்படி கடந்துவிட்டால் இப்போது காம் படிக்கும் இராமாயணம் இல்லையாகி யிருக்கும். இராமாயணக் கதையில் முடிவாகிய இராவண வதம் நிகழ்வதற்கு இராமன் அயோத்தியி: னின்றும் பிரிந்து காட்டுக்கு ஏகவேண்டும். இராவணன் அழிவதற்குக் காரணம் அவன் செய்த தீமையே. தெய்வம் கின்று கொல்லும் என்ற உண்மையை நிறுவும் நிகழ்ச் சிகள் அடுக்கடுக்காக விகழ்கின்றன. அவன், தான் செய்த தீமையின் பயனே நுகர்வதுதான் முடிவு: இராமாயணக் கதையாகிய பெரிய மரத்தின் கனி அது. மரத்தின் விதை இராவணன் செய்த தீமை. அது மண்ணில் மறைந்து ருேம் உரமும் பெற்று முளைத்துக் கொம்பாகிக் கிளை யாகிப் பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும்.

இதோ மரத்தின் முளை தோன்றுகிறது. இதுவரையில் இயல்பாக இருந்த கிலப்பரப்பில் ஒரு புதிய மரத்தின் முளை தோன்றுகிறது. கூனிதான் அந்த முளே. இராவணன் இழைத்த தீமையாகிய வித்து அயோத்தியிலே வந்து கூனி' யாக முளைத்தது.

கூனி கைகேயியிடம் டோகிருள். கைகேயி கவலையின்றித் துயின்றுகொண் டிருக்கிருள். அவளேக் கண்ட பின்பாவது கூனியின் மனம் மாறியிருக்கலாம். ஆனல் அவளே வெவ்? வினையாகிய விதி தூண்டுகிறது.

மூண்டெழு பெரும்பழி

முடிக்கும் வெவ்வினை

தூண்டிடக் கட்டுரை

சொல்லல் மேயினுள், !

1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 44.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/184&oldid=523386" இலிருந்து மீள்விக்கப்பட்டது