பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

3



முன்னுரை

அவமானமா அஞ்சாதே!

முன்னேறுகிற முயற்சியை மேற்கொள்கிறபோதே பின்னேராக வருவது புகழ்ச்சி அல்ல இகழ்ச்சி. பெருமை அல்ல பொறாமை, பொருள் அல்ல மருள். ஏன் அப்படி?

நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதற்குப் பெயர் சொர்க்கம் எதிர்பாராதது நடப்பதுதான் வாழ்க்கை

எதிர்பாராததை முறியடித்து எதிர்பார்ப்பதை நடக்க வைப்பதுதான் முயற்சி. அதற்கு நல்ல துணை நம்பிக்கை

அவ்வப்போது ஏற்படுகிற அவமானங்கள் அனுபவங்கள் அலைக்கழிக்கிற துன்பங்கள் தோல்விகள் அல்ல. அவை வெற்றியின் வேள்விகள், விளங்க வைக்கும் பதில்களின் கேள்விகள். நடை பழகும் குழந்தைகள் தடுமாறி விழுவது சகஜம் எழுந்து நடப்பது மனோகரம்

உங்களைத் தொடர்வது துரோகம். ஆனால் துணிவில் கிடைப்பது விவேகம் கனிவாய் கிடைப்பது யோகம்.

இப்படியெல்லாம் அவனியிலே வெற்றிப் பவனி வர இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் மேலும் மேற் செல்லுங்கள்.

உங்கள் வாழ்வின் வெற்றியை அஞ்சுபவர்களுக்குச் சொல்லுங்கள். அரவணைத்து வழிகாட்டுங்கள். இதுதான் நம் பிறவியின் பேறு!

எதையும் தொடேன். தொட்டால் விடேன் என்று இலட்சிய வேகத்தில் வெற்றி பெறுங்கள் என்று வாழ்த்துகிேறன்

″லில்லி பவனம்″ வாழ்த்துக்களுடன்.

சென்னை - 17 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா