பக்கம்:அவள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு l11


"அதுவே திகைச்சு முழிக்கறது; அடக்க முடியல்லே; எப்ப வந்தது தெரியல்லே'ம்மா என்கிறது.”

"அதைவிடு, என் கேள்விக்கு என்ன பதில்?"

"தெரியல்லியே, ஏதோ மத்தியானம் மிச்சம் மீதாரியை வெச்சிண்டு ராப்பொழுதை ஓட்டிடலாம்னு பார்த்தேன்."

"வாஸ்தவம். அவர் வழிப்போக்கன். நான் ராப்பிச்சை. எனக்கு மூலைப் பழையதைப் பிழிந்து வெச்சுடலாம். சமயத்தில் நானே உனக்கு மிச்சப் பண்டம் தான். முடிந்தால், வாழைப் பூ மடலில் குப்பையோடு குப்பையாய் வாரிவிடுவாய்-"

"துணியை எங்கே உலர்த்தலாம்?"

கூடத்தில் அவர் குரல் கேட்டு, அவசரமாக வெளியே வந்தான். கூடத்து வெளிச்சத்தில் அவரைக் கண்டதும் பிரமித்து நின்றான்.

துணியைத் தோய்த்த கையுடன் அவரும் குளித்து விட்டிருந்தார். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டாற் போல் மேனி செந்தழலடித்தது. விழியேரம் செவந்திருந்தது. குளித்ததனாலோ விற்புருவங்களினடியிலிருந்து விழிக்கதிர் அவன் நெஞ்சைத் துருவிற்று. அவன் மார்புள் ஏதோ கணப்பு பரவுவதை உணர்ந்தான் அவன் கைகள் கூப்பின.

வழிப்போக்கன்?

சன்னியாசி?

தேசாந்திரி?

ரிஷி?

அந்த வயதுக்கு உடம்பில் ஒரு துளிக் சதைப் பிசிர் கூட இல்லை. அவருக்கு என்ன வயதிருக்கும்? நிர்ணயிக்க முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/155&oldid=1497051" இலிருந்து மீள்விக்கப்பட்டது