பக்கம்:அவள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 லா. ச. ராமாமிருதம்



என்ன? என்ன?’- குளத்தண்ட காத்திருக்கும் ஆண்பிள்ளை அலறிக்கொண்டே மரத்தண்டை ஓடி வந்தான்.

கொஞ்ச நாழிகை பேச்சு மூச்சில்லை. பிறகு தீடிரென்று ஜலத்தில் கல்லை விட்டெறிந்தாற்போல், நள்ளிரவை ஒரு புதுக் குரல் கிழித்தது.

அவனுக்கு உடல் புல்லரித்தது. 'நான் வரட்டுமா?"

'இல்லை; இல்லை-சரி, இப்போது வா!'

அவன் இன்னமும் சற்று அருகில் வந்தான்; ஆனால் இருளில் ஒன்றும் தெரியவில்லை.

"என்னா பிறந்திச்சு?'

இருளில் அவள் குழந்தையைத் தடவிப் பார்த்து விட்டுச் சொன்னாள்: 'பொம்புள்ளையாட்டம் இருக்குது.' -

'அட கடவுளே!'.

பராசக்தி சிரித்தாள். ஆனால் மறுகணம் அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் முகத்தின்மேல் ஓர் அழுக்குத் துணி விழுந்தது, குரல்வளையை இரு கட்டைவிரல்கள் அழுத்தின. மூச்சு பயங்கரமாய்த் திணறியது. அந்த எமப்பிடியினின்று வீணே விடுவித்துக்கொள்ள முயன்றாள்,

"என்னம்மே, கொழந்தே- அடிபாவி! என்னா பண்றே?”

என்னெ சும்மா விடுன்னா!"

அடி கொலைகாரி!'

விடுன்னா விடு-’’

குழந்தையை அவன் பிடுங்கிக்கொண்டான். ராச்சஸி! உனக்குப்போய் மகமாயி கொளந்தையெக் குடுத்தாளே!” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/170&oldid=1497038" இலிருந்து மீள்விக்கப்பட்டது