பக்கம்:அவள்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 லா, ச. ராமாமிருதம் "அவர் முகம் சட்டென மாறிற்று. அப்புறந்தான் தெரிந்தது, அவருக்கு ரேஸ் பைத்தியம் உண்டு என்று.” 'உங்களைப் பொறுத்தவரையில் சொல்லுங்களேன். "எனக்கு யோசனை சுவாரசியமாய்த் தானாவே ஒடத்தலைப்பட்டது. பார்க்கலாம், இப்போது நான் வைத்துக் கொண்டிருக்கும் டியூஷன்"களுக்கு அக்கடா என்று ஒரு வருஷத்துக்காவது முழுக்குப் போட்டு விடலாம். செளகரியமாய் இஷ்டப்படி சாதகம் செய்ய லாம். நல்ல குருவை அடுத்துப் பாடம் கேட்கலாம். மதுரைக்குப் போய் ஒலைச் சுவடிகளைப் புரட்டி ஒரு வருஷமாவது ஆராய்ச்சி செய்ய வேண்டுமென் வெகு நாளாய் ஓர் அவா உண்டு.” பேஷ், பேஷ்!" என்று பையிலிருந்து செக் புத்தகத்தை எடுத்துத் துடையில் வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித் தார். உங்கள் முதல் எழுத்து என்ன? 'ஏது, என் விஷயத்தில் இவ்வளவு அக்கறை திடீரென்று? 'உம்மிடத்தில் அக்கறை இல்லை. எனக்கு என் பெண் மேல் இருக்கும் அக்கறைதான்." 'இதென்ன குரு தrனையா? "அப்படித்தான் வைத்துக் கொள்ளுமே.” 'இதென்ன, இந்த மூன்று நாளில் தாrாயணி சங்கீதத்தில் மேதையாகிவிட்டாளா என்ன? "மிஸ்டர் பசுபதி, என் பெண்ணுக்குச் சங்கீதம் வேண்டாம். என் பெண் எனக்கு மிஞ்சினால் போதும். மிஸ்டர் பசுபதி, நான் ஏமாந்து போனேன். என் பெண் உம்மிடத்தில் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/224&oldid=741573" இருந்து மீள்விக்கப்பட்டது