பக்கம்:அவள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
த்வனி 233


ஒன்று ஆத்திரத்தில் அழிகிறோம் அல்லது அன்பால் கொலை செய்யப்படுகிறோம்.

இத்தத் தாகூஷண்யங்களைத் திருப்புவது எப்படி என்று மண்டையைக் குடைந்துகொள்வேன்.

பையனுக்குப் பிஸ்கட் ரோல் வாங்கித் தருவேன்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை கதம்பம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுள் நுழைந்தேன்.

அவள் மட்டும்தான் இருந்தாள். அவள் கணவன் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. பையன் விளையாடப் போய்விட்டான் போலும்.

"வாங்கோ! வாங்கோ!!"

பூப்பந்தை அவளிடம் நீட்டினேன். அவள் கண்கள் விரிந்தன. "எனக்கா?"

"பின்னே என்ன நான் சூட்டிக்கொள்ளவா?"

என்னிடமிருந்து வாங்கிக் கொள்கையில் அவள் கைச் சுண்டுவிரல் என் உள்ளங்கையில் பட்டது. உடல் பூரா ஊடுருவிய ஒரு பரவசத்தில் என் விழிகள் பிதுங்கி என் கையில் விழுந்துவிடும்போல் மண்டையில் ஒரு மின்னல்.

இரு கைகளையும் தூக்கிப் பூச்சரத்தைக் கொண்டையில் சரிப்படுத்திக் கொண்டு அவள் நிற்கையில், ஜீராவில் செய்து வைத்த சின்னிப் பொம்மைபோல் எந்த நிமிஷம் கரைந்துவிடுவாளோ, கடலில் கரையோரம் நடுங்கும். அலை நுரைபோல் சிதறிக் காணாமல் போய்விடுவாளோ என்றுகூட. ஒரு தினுசான வேதனை முதுகுத் தண்டில் ஏறி இறங்கி நெளிகின்றது. இவள் எப்படிப் போனால் எனக்கென்ன என்று ஏன் இருக்கமாட்டேன் என்கிறது?

***

இன்று ராதை வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/277&oldid=1497873" இலிருந்து மீள்விக்கப்பட்டது