பக்கம்:அவள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxxw# கனா. அதை சாசுவதப்படுத்தும் இடையறா முயற்சியே வாழ்க்கை. இதற்கு என்ன வேனுமானாலும் பெயர் கொடுத்துக்கலாம்! நான் பேணும் கனவின் பிரதிநிதி இவள். கடவுளும் இவளே. காதலும் இவளே. இவளே என் தெய்வம், என் தேவி! குடும்பத்துக்குக் குடும்பம் குலதெய்வம் வேண்டும். பரம்பொருளின் சர்வ வியாபகமான அருவத்தை அந்த மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதற்கு, புரிந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத் தைப் பெற ரூப வழிபாடு, வழி, ரூப ப்ரக்ஞை வேண்டும். ரூப ப்ரக்ஞையிலிருந்து நாமப்ரக்ஞை அடைந்து, அதுவே அவள் அருளில் ஸ்வயாகார ப்ரக்ஞையாக மாறவேண்டும், முழுமையான நிபந்தனைகளற்ற ஸ்வயாகார ப்ரக்ஞை. அதுவே அனுபவமாக ஊடுருவுகையில், அதைத் தாங்க முடியாது. நாம் சாதாரணமானவர்கள். அன்றாட சக்தி யில் வாழ்பவர்கள். அதற்குக் குலதெய்வமே, கை கொடு! அபிஷேகம் அலங்காரம், அர்ச்சனை நைவேத்யம், எல்லாம் முடிந்தபின்னர் குருக்கள் ஒரு வசீகரமான சம்பிரதாயத்தைச் செயலுக்குக் கொணர்ந்தார். எங்களை சன்னதியில் உட்காரவைத்து, அம்பாள் மேல் சாற்றிய மாலைகள் இரண்டையெடுத்து எங்களிடம் கொடுத்து எங்களை மாலை மாற்றிக் கொள்ளச் சொன் னார். சந்தனப்பேலாவில் அபஷேக சந்தனத்தை நீட்டி உபசரித்தார் ஒரு தட்டு நிறைய அம்பாள் பிரசாதம். தேங்காய் மூடி, வெற்றிலைப் பாக்கு, நிறைய பழம், பூச்சரங்கள் கொடுத்தார். தொண்டையை எ ன் ன வோ செய்கிறது. ஆச்சு போச்சு, நல்லதோ எங்கள் பொல்லாதோ, சண்டையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/36&oldid=741723" இருந்து மீள்விக்கப்பட்டது