பக்கம்:அவள்.pdf/367

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அபூர்வ ராகம் 器器3 கிறது. என் கறுப்புக்கூட வெளுக்கும்படியிருந்தால்... உங்களுக்கு ஏன் கண் சிவந்திருக்கிறது?’ என்று புன்னகை புரிந்தாள். "ஆமாம், துளசி விழுந்திருக்கும்" என்று கண்ணை நன்றாய் கசக்கிக்கொண்டேன். போய் வருகிறேன்.” அவள் ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. இதென்ன வாழ்க்கை இவ்வளவு சூன்யமாய்க்கூட இருக்க முடியுமா என்ன? எதைத் தொட்டாலும் எடுத்தாலும் நினைத்தாலும் அவள் உருவம் இடைமறித்துக்கொண்டு நின்றது-பளபளக்க வாரி முடிந்த மயிரும் நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும் இரு புருவங்களுக்கு மத்தியிலும் இட்ட பொட்டும், மேலாக்கின் வெளியே வந்த பவள மாலையும், உள்ளங்கையிலும் கைகால் நகங்களிலும் பற்றிய மருதாணியும் சோறு தொண்டையில் விக்கியது. உலகம் ஏன் இவ்வளவு சோபையற்றுவிட்டது? அல்லது எனக்குத்தான் இறக்கை ஒடிந்துவிட்ட தா? "என்னடா, நீயா கலியானமே வேண்டாமென்ற பிள்ளை' என்று அம்மா கேலி பண்ண ஆரம்பித்து விட்டாள். 'அதெல்லாம் ஒ ன் று மி ல ைல அம்மா! வெய்யி லல்லவா!' என்று மீசையை முறுக்கிக்கொண்டு சிரித் தாலும், என் சிரிப்பு என்னையே ஏளனம் பண்ணிற்று. இருப்புக் கொள்ளாது நடந்துகொண்டே சென்றேன், கால் இழுத்துக்கொண்டு போனபடி. எதிரே ஒரு பிணம் வந்தது. பிராமணப் பிணம். கொட்டுப்பாறை, பூப்பல்லக்கு ஒன்றுமில்லாது, சுட்டுப் பொசுக்குவதற்காக அவசர அவசரமாய் எடுத்துக்கொண்டு ஒடுகிறார்கள். முறுக்கான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/367&oldid=741731" இருந்து மீள்விக்கப்பட்டது