பக்கம்:அவள்.pdf/421

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு முத்தம் 377 பேசிக்கொண்டே இலையைப் பாதியாகக் கிழித் துப் பரிமாறிவிட்டாள். சாதத்தின்மேல், அவள் விட்ட சாம்பார் சாதத்துள் பரவலாக இறங்கியதைப் பார்க்க நன்றாய்த்தானிருந்தது. ஒரு கவளம் போட்டுக்கொண்டேன். உம்ம்-Not bad, mot at all bad -

  • எப்படி இருக்குது...பார்ப்பார வீட்டுச் சமைய லாட்டம் இருக்கா? ரெண்டு தலைமுறைக்கு முன்னாலே கன்வர்ட் ஆவறதுக்கு முன்னாலே நாங்க அய்யமாரு:”

அப்பவே நாக்கில் சுருக்.’ பிடுங்கி எடுத்தேன்...வெள்ளை வெளேரென்று பொடி முள். அதன் பிரதிபலிப்பாய் எண்ணம் உள் ஊறினதும் உடனே எழுந்த குமட்டலைத் தாங்க முடியாமல் பாத் ரூமுக்கு ஓடினேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த் தனர். அவள் சிரிப்பு துரத்திற்று. திரும்பிப் பார்த்தேன். மேல் வரிசையில் இரண்டு தெற்றிப் பற்கள் தெரிந்தன. இன்று இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானம் பண்ணிவிட்டாள். “What a funny man you are!” மெளனமாய்ச் சற்று நேரம் நடந்தோம். அவள் வீடு என் வழியில் இல்லை. ஆனால், ஷாப்பிங் செய் பணுமாம். நாளைக்கு தீபாவளியில்லே?" 'உங்களுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் மிஸ் மார் வா?’’ "நான் மிஸ் இல்லை." 'சரி, மிஸஸ் மார் வா...' "நான் மிஸஸ்ஸுமில்லை.” இதென்ன புதிர்? என்னத்தை விளக்கம் கேட்பது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/421&oldid=741792" இருந்து மீள்விக்கப்பட்டது