பக்கம்:அவள்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நேற்று--

உச்சி வெய்யிலுக்கு ஒரு குருவிக்காரி பிச்சைக்கு வந்தாள், தகரக் குவளையைத் தட்டிக்கொண்டு, வாய்க்கு வந்ததைப் பாடிக்கொண்டு, அதுக்குத் தக்கபடி ஆடிக் கொண்டு,

'டேக்கு மைனா டேக் டேக்
லேலேலே லெல்லே லேலே
லேலேலே லெல்லே லேலே
லாலி லல லல்லாலிலிலீலால லல்லாலலீ
லல்லாலக்கடி லல்லாலக்கடி லல்லாலக்கடி லேலேலே
நன்னாலக்கடி நன்னாலக்கடி லல்லாலக்கடி
நாநாநா!'

வயசுப் பெண். தன் மெட்டில் தானிழைஞ்சு போய் அவளுக்கு வெறியாட்டம் கண்டுடுத்து. கையும் காலும் தனக்குத்தான் தலையாட்டமா தலை தெரியாமல் இயங்கறது. தொப்புளுக்குக் கீழே பாவாடை இறங்கிப் போச்சு. மாருக்கு ஏறிப்போன ரவிக்கைக்குள்ளே கூட்டுக்குள்ளே குருவியாட்டம். குடத்துவிளிம்பிலே ஜலமாட்டம், குத்துமலை தளும்பறது. பாசிமணி மாலை கழுத்தில் மூலைக்கொண்ணா குதிக்கறதுகள். அவள் ஆட்டத்தைப் பார்த்து அத்தையும் நானும் குலுங்கக் குலுங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு,

'மூலைப் பழையதில் உப்புக்கல்லை கரைச்சுக் கொண்டு வந்து இவளுக்கு ஊத்து.”

நான் ஊத்த ஊத்த, அவள் உறிஞ்சிஉறிஞ்சிக் குடிச்சும் குவளை வழிஞ்சுபோச்சு, தடிச்சி! இருந்தாப்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/497&oldid=1497675" இலிருந்து மீள்விக்கப்பட்டது