பக்கம்:அவள்.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


458 லா. ச. ராமாமிருதம் 'தர்க்கம், நியாயம் எல்லாம் பிரமாதமாய்த் தானிருக்கு. ஆனால் சம்பிரதாயம், வழக்கம், முறைன்னு நமக்கு முன்னால் பெரியவாள் எல்லாம் தொன்று தொட்ட ஏற்பாடா பண்ணிட்டுப் போயிருக்காளே, அதெல்லாம் பிசகுன்னு ஒரு திமிஷத்தில் தூக்கியெறிஞ்சுட இந்த விஷயத்தில் என்ன அவசரம் வந்துடுத்து? நீ ஏன் கேக்கறேன் னு எனக்குத் தெரியும். இன்னிக்கு மத்தியானம் நடந்த விஷயத்தில்-அவள் குருவிக்காரியா யிருந்தால் என்ன, குபேர சம்பத்தாயிருந்தால் என்ன? நம் ஸ்திரீ வர்க்கத்தின் மானம் அடமானம் மீட்கவேன்டிய அவசியம் நேர்ந்துபோச்சு. அது மாதிரி உனக்கு நேரணுமா? அவளுக்கும் உனக்கும் ஈடா? அங்கு நீ பெற்றால் என்ன? நான் வந்து பார்க்க மாட்டேனா!' என் பிடரியில் அத்தை கை எவ்வளவு சுகமாயிருக்கு: எனக்கு தூக்கம் வரது. என்னையறியாமல் என் தலை ஆடி, அத்தை கைமேல் சாயறது; அப்புறம் நினைவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/502&oldid=741882" இருந்து மீள்விக்கப்பட்டது