பக்கம்:அவள்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 481

"Perhaps So...வாழ்க்கையில் சில நெருக்கடி கட்டங்கள் நேர்கையில், வேஷங்கள் உரிந்து அந்த சமயம் நிர்வாணம் ஆகும்போது. அது Unreal ஆக Melodramatic ஆகப்படத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம், கொஞ்ச நாட்களாகவே - உனக்குத் தெரியவில்லையா?”

குரலில் ஓர் அசாதாரண நிதானம். அமைதி வாயடைத்துபோனேன்.

"என்றேனும் ஒருநாள் நாம் இந்த வேளையை நேருக்கு நேர் சந்தித்துத்தானே ஆக வேண்டும்...? வேளை வந்துவிட்டது.' :

எனக்கு உடம்பு பூரா 'ஜிவ்' This Man Means Business இந்த மனிதன் திடீரென அன்னியனாகி விட்டான். நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கையிலேயே, ஏதோ ஒரு வகையில் மேல்கூரையைப் பிரிக்கிறான்...இந்த மனிதன் அஞ்சத்தக்கவனாகிவிட்டான்.

அஞ்சுகையிலேயே மனம் ஏதோ ஒரு விடுதலையில் துள்ளிற்று. என் உண்மையைச் சந்திக்கப் போகிறேன். காத்திருந்த இத்தனை நாட்களும் ஒரு வழியா பின்னால் போச்சு...அப்பாடா! உங்கள் பயமுறுத்தல் இப்பவோடு சரி.

“Yes உமா... இந்தப் பொய்மையைக் கலைச்சாகணும். நாம் விவரங்களுக்குள் போய் அலசிக்கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு, ஒருவரையொருவர் இன்னமும் ரணமாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். கட்டம் முற்றிப்பேஎச்சு. நாம் கணவன்--மனைவியாக வாழவில்லை. ஒருவரையொருவர் பலப்பரீட்சையில் இறங்கிவிட்டோம். இது கணவன் மனைவி

அ--31



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/525&oldid=1497573" இலிருந்து மீள்விக்கப்பட்டது