பக்கம்:அவள்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484 லா. ச. ராமாமிருதம்



அவருக்கு அடுத்த ஆட்டத்திலேயே இரண்டு தாயங்களும், ஒரு மூச்சில் சொல்லி அடங்காத மாதிரி நீண்ட தொகையும்--

எனக்கு ஆட்டத்தில் சூடும், ரோஷமும் பிடித்து விட்டன. கட்டைகளை வீசிப் போட்டேன். நெருக்கிப் போட்டேன். அவர் காய்களை என் காய்கள் வெட்டின. வீழ்த்தின. துரத்தின, மடக்கின, தப்பின.pincer moves.

எதிர்க்காய்களை வெட்டும் ஒவ்வொரு சமயமும் என்னுள் ஒரு குரூர மகிழ்ச்சி பொங்கிற்று. இத்தனை நாட்கள் என்னுள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வடிகால் கண்டது. இந்த மனுஷனை ஒரு பழம்கூட ஏற விடக்கூடாது. முழுக்கப் பழிவாங்கணும். அப்போத் தான் எனக்குக் கூந்தல் முடிச்சமாதிரி. ஆனால் அப்படி இவன் உனக்கு என்ன தீங்கு செய்தான். I don't know, I don't care... இவனுடைய ஆணவத்தை பூரா அழித்தாகணும். கட்டைகளும் என் பங்கில் இருந்தன.

The hunter and the prey. ஒன்றை யொன்று ஒன்றுக்கொன்று எது எந்த சமயத்தில் இடமாற்றம்? இதுதான் த்ரில். என்னை வெறி பிடித்துக்கொண்டது. பலப் பரீட்சையாம்! உங்கள் இஷ்டப்படியே, உங்கள் நிபந்தனைப்படியே. You are having it.

என் கடைசிக் காயைப் பழமெடுத்து தாயக்கட்டைகளை வீசி எறிந்தேன்.

"ஐயா, ஆட்டம் இழந்தவரே, இப்போது என்ன சொல்கிறீர்கள்? உம்முடைய பணயத்தைக் கக்கும்."

'உள்ளே போய்க் குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டு வா!'-குரல் வெகு அமைதி.

"படம் தொடர்கிறதா.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/528&oldid=1497567" இலிருந்து மீள்விக்கப்பட்டது