பக்கம்:அவள்.pdf/531

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாற்கடல் 15 மஸ்காரம், கேடிமம். rேமத்திற்கு எழுத வேணு மாய்க் கேட்டுக்கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும்போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப்போகிறீர்கள்? அதனால் நானே முந்திக்கொண்ட தாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரி யிருந்தால்தானே. என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்க கத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கறாள்! என்று வீட்டுப் பழைய பெரியவாள். புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திவிடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ண லாம்! பண்ணினால் பண்ணட்டும், பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியுமதுவுமாய், அவ்வளவு தூரத்தி லிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவள்ளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/531&oldid=741914" இருந்து மீள்விக்கப்பட்டது