பக்கம்:அவள்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492 லா. ச. ராமாமிருதம்



மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது? நிஜம்மா நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தைகூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக்கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் மூன்றானை நுனியை அடைச்சுண்டு கணற்றடிக்கு ஒடிப்போயிட்டேன்.

எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருந்தேனோ அறியேன்.

"என்னடி குட்டி, என்ன பண்றே?”

எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச்செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக்கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்:

"ஒண்ணுமில்லையே அம்மா!' என்று அவசரமாய்க் கண்னைத் துடைத்துக்கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.

'அடாடா கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே." (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!} "என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே, உன் உடம்பு எங்களுக்குப் பிடிபடற வரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட, குட்டி இதென்ன இங்கே பாருடி!'

அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த் தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/536&oldid=1497385" இலிருந்து மீள்விக்கப்பட்டது