பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வெயில் வேறு தகித்திருக்கிறது. சாப்பிடவில்லை. பசி பணமில்லையே என்ற கவலை, எதிர்காலம் பற்றிய கவலை, ஏமாற்றம், அவமானம் எல்லம் சேர்ந்து அவளைச் செயலற்றவளாக்கி விட்டன. அவள் செய்வது என்னவென்று அறியாமல அங்கேயே நின்றாள். அப்பொழுது, கழுகு மாதிரி அங்கேயே வட்டமிட்டுக் கொண்ட்டிருந்த அவன்-- எக்ஸ்ட்ரா தரகன் -- அவளருகில் வந்து அன்பாகப் பேச்சுக் கொடுத்தான், அவளைத்தன் வீட்டுக்கு அழைத்துப் போய் உபசரித்தானாம். 'பிறகு அவரையும் இவரையும் பார்த்து சான்ஸ் வாங்கிக் கொடுப்பதற்கு என்னப் பாடா பட்டேன். அப்பப்பா, அன்னைக்கு நான் மட்டும் உதவி புரியலேன்னு சொன்னா, புஷ்பா பாடு அவ்வளவு தானே, தெரு நாய் மாதிரிச் சீரழிஞ்சு போயிருக்க மாட்டாளா சீரழிஞ்சு?' என்று சொன்னான் அவன்.

'அவ நன்றி கெட்ட நாய் ஸார். இவ்வளவெல்லம் உதவி செய்தேனே அதை நினைச்சுப் பார்க்கிறாளா? ஊஹூம் எவனோ ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டரின் உறவு கிடைச்சிட்டுது, அப்புறம் என்னை ஏன் கவனிக்கப் போறா ? இந்த எக்ஸ்ட்ராக்களே அப்படித்தான், ஸார். படத்துக்குப் பின் படம் என்று சான்ஸ் வாங்கிக் கொடுக்கிற வரைக்கும் அண்ணே, அண்ணேன்னு பின்னாலே திரிவாளுக, தொடர்ந்து சான்ஸு கிடைத்து, கண்ணைச் சுழட்டி, ஜாடை காட்டி கம்பெனியிலுள்ள. எவனையாவது கைக்குள்ளே போட்டுக் கொண்டால் சரிதான், பிறகு என்னை மறந்து விடுவாங்க. நீ யாரோ, உன்னை யாரு கண்டா என்று விரட்டி விடுவாங்க தேவடியாப் புத்தி எங்கே ஸார் போகும்? என்றான்.

இவன் இப்படிச் சொல்கிறான் அவள் என்ன சொல்வாளோ? இவன் சொல்வதையும் சசரி சரியென்று கேட்டுக் கொள்ள் வேண்டியதுதான் என்று என் மனம் பேசியது.

அப்படியானால் இப்பல்லாம் புஷ்பாவுக்கு நல்ல சான்ஸு தானா? என்று கேட்டேன்.