பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அவள் விழித்திருந்தாள்

இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாருடைய நினைவு மனசைப் போட்டு உலுப்பறதோ அந்த சாயிராம் சிரித்துக்கொண்டே எதிரில் நின்றான்.

“இல்லியே. கண்ணிலே என்னவோவிழுந்துட்டாப்பல இருக்கு”

சொல்லிக்கொண்டே துாணில் இருந்த குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டபடி வெளியே வந்தாள்.

சுவாமி சன்னதியை அதற்குள் பூட்டி விட்டார்கள். வரும்படி இருந்தால் சுவாமி சற்று நல்ல காற்றை சுவாசிக்க திறந்து வைப்பது வழக்கம். இல்லையெனில் அவரைக் கம்பிக் கதவுக்கு அப்பால் தள்ளி விடுவது.

அப்புறம் சுற்றுக் கோவில்களில் விளக்கே இல்லை. நல்லெண்ணெய் இருபது விற்கிறபோது யார் தீபம் போடப் போறா...ஒண்ணும் தெரியலே. பிள்ளையாரா, தணாக்ஷிணாமூர்த்தியா, துர்க்கையா? எல்லாம் ப்ரும்மம்தான்... என்று ஒரு கிழம் சொல்லக்கொண்டு போயிற்று.

“கொஞ்சம் உட்காருவோமே...” அங்கேயிருந்த கல்லில் உட்கார்ந்தான். அவளும் எதிரில் உட்கார்ந்தாள். இந்த மூக்கும், கண்களும், உதடுகளும் எப்படி இவ்வளவு அளவோடு இவளுக்கு வாய்ச்சுது...என்று அதிசயித்தான் சாயிராம்.

“ஆத்துக்காரர் இல்லாம விட்டுட்டுப் போயிட்டான்னு அம்பாள் கிட்டே சொல்லிண்டு அழுதையாக்கும். எங்கிங்டே மறைக்கிறே..அவன் ஒரு ரசனை கெட்ட ஜன்மம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?”

அவள் கீழே கிடந்த குச்சியால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“அதானே கோபம்?”

“ஊஹும்...”

“பின்னே அவர் எங்க இருந்தா என்ன?”

சாயிராமுக்கு சுவாரஸ்யம் தட்டியது.

“என்ன அப்படிச்சொல்றே. பணக்காரன். கனகாபிஷே