பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்103என்னவென்றால் அது தொண்டு. இறைவனுக்குத் தொண்டு.

136. வைஷ்ணவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்ததப் பத்தி அவரு சொல்லல....

இல்லை, இல்லை அன்றைக்கு வைணவம் இருந்த இடமே தெரியாது யாருக்கும். சோழப் பேரரசில் எல்லாச் சோழனும் சைவன். அது மட்டுமல்ல. இங்க சைவம்கிறது அந்த பேஸ் இருக்குதே சுந்தரமூர்த்தியோட தேவாரம் அதுக்காக நன்றி பாராட்டித்தான் தீரனும். ஆனா இவர் சுந்தரமூர்த்தி சொன்ன ஆஸ்பெக்ட் எடுத்துக்கிடல இவர் எடுத்துக்கிட்டதெல்லாம் ஒவ் வொருத்தனும் தொண்டு செய்யணும். இந்தத் தொண்டுல என்ன தகராறுன்னா. அத எழுதியிருக்காரு. விஸ்தாரமா. இவருக்குத் தினம் 10 ரூபா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அன்போடத்தான் கொடுக்கிறேன். ஆனா அவருடைய மனம் என்ன செய்யும். ஒரு மாசம் ஆன உடனே பாருங்க திண்ணைச் சோறு திங்க வேண்டியிருக்கு. எங்கால்ல நிக்க முடியலேன்னு இந்த பயகிட்ட அ.ச போயி தினமும் காலேல நிகக் வேண்டியது இருக்குனு நினைப்பாரு. ஒரு இரண்டு மாசம் முடிச்சதுமே என்னதான் இராஜேந்திரன் அது இருந்தாலும் ஏதோ நாம தஞ்சாவூர்க்காரப் பையன்னு நினைச்சு தினம் பத்து ரூபா கொடுக்குறாரு. எனக்குத் திமிர் வந்துரும். வந்தத நான் வெளியில சொல்ல மாட்டேன். ஆனா அந்த வைப்ரேஷன்ஸ்' இருக்குது பாருங்க, கூனிக் குறுகிடுவாறு. இதுக்காக என்ன செய்தான். இறையன்பைக் கூடச் சேர்த்தான். அதுக்கு நான் விளக்கம் எழுதினேன். ஜெர்மனிலேயும், அமெரிக்காவிலேயும் பிறந்த கோடீஸ்வரனுடைய மகள்