பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 தோன்றாத் துணை "அந்த ஹெட்கிளார்க் கிழம் கரிச்சுக் கொட்டுமே? எப்படி சமாளிக்கிறிங்க, மேடம்?" அவன், மேடம்' என்று சொன்ன வார்த்தையில், வசந்திக்கு அந்தத் தலைமைக் குமாஸ்தா ஏசும் ஏச்சுக்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவள், இப்போது சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள். "சொல்லுங்க மேடம். அந்த ஆளு உங்களக் கன்னா பின்னான்னு திட்டியிருப்பானே. பேச மாட்டிங்களா? பெண்ணுக்கழகு மெளனம்’னு பெரியவங்க சொல்லு வாங்க. நீங்க ஏற்கனவே அழகாய் இருக்கிங்க. இதுக்கு மேல அழகு தேவையில்ல. மெளனத்தைக் கலைக்கலாம்." இப்போது அவள் சிரித்தே விட்டாள். "அவர் என்னைத் திட்டுறது உங்களுக்கு எப்படி தெரியும்?" "பிரண்ட்ஸ் சொன்னாங்க டோண்ட் ஒர்ரி, இனிமேல் நான் இருக்கேன். அது, நாட்டாமை ஒண்னும் பண்ண முடியாது. ஐ ஆம் ஸாரி. நான் உங்க நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறதை மறந்துட்டேன். கமான், டேக் யுவர் எபீட் மேடம்." வசந்திக்குப் பிறப்பின் பெருமையை இன்றுதான் உணர்ந்ததுபோல் தோன்றியது. அன்றும் வழக்கம்போல், தலைமைக் குமாஸ்தா அவளைக் கரித்துக் கொட்டினார். "ஏம்மா, ப்ளீஸ் இஷ்யு ஆர்டர்’னு எழுதாமல், ப்ளிஸ் ஆர்டர் இஷ் யு'னு எழுதினால் என்ன அர்த்தம்? பழையபடியும், ஏபிஎபிடி படிச்சு, இங்லீஷ் கத்துக்க” என்றார் காரமாக, பிரகாஷால் பொறுக்க முடியவில்லை. "அந்தப் பொண்ணு பாவம், புதுசு. பக்குவமாச் சொல்லி கொடுக்கிறத விட்டுப்புட்டு, டபாய்ச்சா என்ன ஸார்