பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 பக்த கேடிகள் 'ஐயப்பா. என் பொறுமையை பலவீனமாய் கருதாதே. நீ. திமுக அதிமுக... தெலுங்கு தேசம் மாதிரி ரீஜினல் பலசாலியாய் இருக்கலாம். நானோ தேசிய அந்தஸ்து பெற்றவன். வங்கத்தில் கார்த்திக். சமஸ்கிருதத்தில் கப்ரமண்யா...' 'நீ ஒரு சரண் சிங் என்று எனக்குத் தெரியும். சொல்வதை நன்றாகக் கேள். நான் வம்புக்கு போகமாட்டேன். வந்த போரை விடமாட்டேன். 'இந்த முருகன் போருக்குப் போக வேண்டாம். போர் முகத்தைக் காட்டினாலே போதும். நீ பொடியாவ. ய். பொடியன் போல் பேசாதே. விஷ்ணுவின் புத்திசாலி

த் தனமும். சிவனின் போர்க்குணமும் கொண்டவன் நான். 'என் பக்தன் கிருபானந்த வாரியார் பேச்சைக் கேட்டிருக்காயோ...' 'என்னைப் போற்றும் கேரள வாரியார்கள் மந்திரங்களைக் கேட்கவே எனக்கு நேரமில்லை. கிருபானந்த வாரியாரைக் கேட்க ஏது நேரம். அப்படியானால் இன்றே கேள். வாரியார் காலாட்சேபத்தை நன்றாய் கேள். முருகன் ஒருவனே ஆண்பிள்ளை. சிவன் என்ற ஆணின் நெற்றிக் கண்களில் தோன்றிய அவன் ஒருவனே ஆண்பிள்ளை. நாம் எல்லாம் பெண்பிள்ளைகள் என்று அவன் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பகர்வதைக் கேள். நாமெல்லாம் என்பதில் நீயும் அடங்குவாய். நான் ஒருத்தனே ஆண்பிள்ளை.' பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்தில் மெள்ளப் பேசு முருகா. கேட்டால் புதுமைப் புரட்சிப் பெண்கள் உன்னையும் என்னையும் விடமாட்டார்கள். ஏற்கனவே மானுடன் விட்ட ஏவுகணைகளாலும் செயற்கைக் கோள்களாலும் நாம் பறக்க முடியாமல் அல்லாடி வந்திருக்கிறோம்.'