உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தார்த்தன் துறவு முடிமீது ஆசை முழுவதும் விட்டேன், வாழும் மன்னரை வாட்குஇரை யாக்கி, நீள்நிலம் பற்றும் நினைப்பும் ஒழித்தேன்; பதல மெல்லாம் போர்க்களம் ஆக்கிய பாதகன் என்றுஎனைப் பழித்து எவ ருஞ்சொல, ஓடி ஒழுகும் உதிரப் பெருக்கில் தேர்க்கால் புதையத் திசைதொறும் சென்று வெற்றிமேல் வெற்றி வென்று; வீர வெற்றி மாலை மிலைத்திட விருப்பம் எள்ளள வேலும்என் உள்ளத்து இல்லை. சிறுமை தந்திடும் தீவினை புரியேன்; பொறுமை நிதமும் போற்றி ஒழுகுவேன்; புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதி லாத பஞ்சணை யாகும். யாழிட மான பாைைய நல்வ வாழிட மாச மதித்து வாழ்வேன்; ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த் தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்; பணிசெய் பள்ளர் பறையர் அணியும் துணியை அரையில் சுற்றித் திரிவேன்; தெருத்தெரு வாகத் திரிந்து பெற்ற பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன். ருன்றும் குகையும் குத்துச் செடியும் அன்றி வேறெதும் அணடி ஒதுங்கேன்; இரவும் பகலும் எவ்வெப் பொழுதும் பால் உயிர்கள் படுந்துய ரெல்லாம் புகுந்துஎன் உள்ளம் புண்படு கின்றது. ஆதலின், இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன்; துன்ப வாழ்வைத் துணிந்து போற்றினேன். சிறிய பெரிய தேவர் தபமுள் 39 35 60 65 70 73 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/40&oldid=1502294" இலிருந்து மீள்விக்கப்பட்டது