உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

pull ups
punctuation நிறுத்தக் குறியியல், நிறுத்தற் குறியீடு
punishment தண்டனை
pupil records மாணவர் பதிவுகள்
pupillary reflex பாவை மறி வினை
puppet பொம்மை
purposing நோக்கமுறுதல், துணிதல்
purposive activity நோக்குடைச் செயல், நோக்குடைத் தொழிற்பாடு
purposivists நோக்க நெறியினர்
puzzle box புதிர்ப் பெட்டி
pyorrhoea ஈறழற்சி
pyramid கோபுரம், பிரமிட்
Q
quack போலி மருத்துவர்
quadrangle நாற்கோண உருவம், உள் முற்றம், அங்கணம்
quadrant கால் வட்டம்
quadrilateral நாற்கோணம்
quadruple நான்கு மடங்கான
qualification தகுதி
qualitative பண்பறி
quality பண்பு
quantify அளவுக் கணக்கெடு
quantitative அளவறி
quarantine நோய் காண் விலக்கம்
quarrel சச்சரவு, சண்டை
quarter காற்பாகம்
quarterly examinations காலாண்டுத் தேர்வு
quarters வசிக்குமிடம், உறையுமிடம்
quartile, lower கீழ்க் கால்
upper மேல் கால்
quasi அரைகுறை, போன்ற
question கேள்வி, வினா
questionnaire வினாப் பட்டியல், வினாத் தொடர், வினா அறிக்கை
queue கியூ, முறை வரிசை
quibble சொற் புரட்டு, சிலேடை
quicken உயிர்ப்பி, விரைவாக்கு
quick-witted அறிவுக் கூர்மையுள்ள
quinquennial ஐந்தாண்டு
quiz விடுகதை
quota பங்கு வீதம்
quotation மேற் கோள், மேற்கோள் குறி
quotient ஈவு
R
R ‘துல’ (துலங்கல்)
race இனம், குடி மரபு, ஓட்டப் பந்தயம், (பந்தய) ஓட்டம்
race experience இன அனுபவம்
race memory இன ஞாபகம்
racial unconscious இன நனவிலி
racket (raquet) பந்து மட்டை
radial ஆர வீச்சான
radiate ஒளி விடு
radical அடிப்படை மாற்றுநன், முளை களைநன்
radio வானொலி, ரேடியோ
radius ஆரம்
ragging துன்புறுத்தல்
rally அணி திரட்டு
ramble திரிதல்
random தற்செயலான, மனம் போன படி
range பரவல் (st.), வீச்சு
rank வரிசை, மதிப்புத் தரம்
correlation வரிசை இணைப்பு
method வரிசை முறை
rapport மனம் ஒன்றல், மன உடன்பாடு
rapture கழி மகிழ்வு
rate வீதம், விலை, தரமிடு
ratify ஒப்பு (verb)
rating தரமிடல், தரமீடு
rating sheets தரமீட்டுத் தாள்கள்
ratio விகிதம், விழுக்காடு
rational பகுத்தறிவு கூடிய
rationale காரண விளக்கம்
rationalism பகுத்தறிவுச் சிறப்புக் கொள்கை, அறிவு முதற் கொள்கை
rationalization சரி காட்டல், ஏதீடு, காரணங் கற்பித்தல்
raw score மூல மதிப்பெண்
reaction எதிர் வினை
mechanism எதிரியக்கம்
time எதிர் வினைக் காலம்
reactionary பிற்போக்கான

7