பக்கம்:ஆடும் தீபம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆடும்



மட்டும் கொண்டாட்டம் இல்லை; விளக்கு இல்லை; ஒளி இல்லை

அல்லி உடலைச்சுருட்டிக்கொண்டு மண்தரையில் அழிந்தகோலம் போலக் கிடந்தாள். மூச்சு உயிரின் சுருதி. அவளிடமிருந்து பரிந்த நெடுந்துயர்மூச்சு சுருதி பிசகி ஒலித்தது. மனம் காக்கையின் அடி மூக்கைப் போல வெந்து வெளிறியது.


‘அல்லி... அக்கா!’

அல்லி தலையை லேசாகத் தூக்கிப் பார்த்தாள். வாசலில் நின்று கொண்டிருந்த உருவம் சரியாகத் தெரியவில்லை. நிலவு வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு வாசலில் சரிந்திருந்தது கூரையின் நிழல். குரலுக்கு உருவம் இல்லை. அதனால் அதைப்புரிந்து கொள்ளவெளிச்சம் வேண்டாம். மேலவீட்டு வெண்டியப்ப அண்ணன் மகள் செந்தாமரை அல்லவா அழைக்கிறவள்?

அல்லியின் நெஞ்சுதான் செந்தாமரை என்று சொல்ல வேண்டும். வயதில் இரண்டு குறைவாக இருக்கலாம். இருந்தால் என்ன?புத்திசாலித்தனத்தில் இந்த ஊருக்கே மூத்தவள் அவள்தான். மிகமிக மெல்லிய கொடியாக ஓடிச் சீக்கிரமாக, ஆனால் ருசியில் உயர்ந்த பழங்களைத் தரும் திராட்சையை ஒத்தவள் அவள். இந்த ஊரில் வயதில் பெரியவர்கள் இருக்கிறார்கள். கோயிலில் முதல் காளாஞ்சி உரிமையை நிலைநாட்ட ஹைகோர்ட் வரை போய் வந்த புலிகளும் இருக்கின்றன. பஞ்சாயம் செய்வதில் தீரர்களான தலைப்பாகை'களும் இருக்கின்றன. அவர்களெல்லாம் நெடுங்காலம் வளர்ந்து நிலையான பலனைத் தரும் புளிய மரத்தை ஒத்தவர்கள். அது தரும் பழத்தை பிளேட்"டில் வைத்துச் சாப்பிட முடியுமா? குழம்புக்குத்தான் கரைக்கலாம். அதைப்போலபெரியவர் களெல்லாரும் வேறொன்றில் கரைந்து பிரகாசிப்பவர்கள். திராட்சைப் பழத்தைப் போல தனி இன்ப ருசி படைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/15&oldid=1390050" இலிருந்து மீள்விக்கப்பட்டது