பக்கம்:ஆண்டாள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
ஆண்டாள்
 


இன்னும் திருப்பாவைச் செல்வியார், பெரியாழ்வார் திருமகள், விஷ்ணு சித்தன்மகள் என்னும் பெயர்களும் காரண காரியப் பெயர்களாகக் காணக் கிடக்கின்றன.

பிள்ளை விளையாட்டு

'கோதை' சின்னஞ்சிறுமியாக, சிற்றாடை கட்டும் பருவத்தினனாய், மழலை மாறாமல் விளையாட்டிலும், கேளிக்கையிலும் பொழுதுபோக்கினாள். சிற்றில் செய்து மண்ணால் செய்த பாண்டங்களைக் கொண்டு, மரப்பாச்சி பதுமை வைத்து, மண்சோறு சமைத்து யாவருக்கும் பகிர்ந்து கூட்டாஞ்சோறு சமைக்கும் பருவத்தினள். இப்பருவத்தில் கோதையின் செயல்கள் யாவும் அருமையாக இருத்தலின் கேள்விக்குறியாகவும். பார்ப்போருக்கு அமைந்தன, சிற்றில் கட்டி விளையாடும்போதும், அரங்கனுக்குத் தனி அறை அமைகின்றது. அங்குப் பெருமான் அமர்கின்றான். அவனுடைய சங்கு, சக்கரம், தண்டு. வாள். வில் ஆகிய கருவிகள் வரையப்பட்டுள்ளன. இக் காட்சியைப் பெரியாழ்வார் நோக்குகின்றார். அவருடைய இந்த வியப்பு இவர்தம் பாடல்களில் ஒலிக்கின்றன.

செய்ய நூலின் சிற்றாடை
செப்ப னுடுக்கவும் வல்ல ளல்லள்60

- பெரியாழ்வார் திருமொழி 3:7:1


பொங்கு வெண்மணற் கொண்டு
சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்க சக்கரம் தண்டுவாள
வில்லு மல்லது இழைக்கலுறாள்61

-பெரியாழ்வார் திருமொழி, 3:7:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/38&oldid=957507" இருந்து மீள்விக்கப்பட்டது